Whatsappல் வந்துவிட்டது சூப்பரான புதிய அம்சம்! இனி இப்படி செய்ய முடியும்..........
- Get link
- X
- Other Apps
வாட்ஸ்ஆப் ’பாஸ்’ அம்சம் மீண்டும் அறிமுகமாகியுள்ளது. தனது வாய்ஸ் மெசேஜ் சேவையில் தான் இந்த அட்டகாசமான அம்சத்தை வெளியிட்டுள்ளது வாட்ஸ் அப் நிறுவனம்.
இதன்மூலம் வாய்ஸ் மெசேஜ் அனுப்பும்போது பயனர்கள் தாங்கள் பேசுவதை பாதியில் நிறுத்திவிட்டு, மீண்டும் சிறிது நேரம் கழித்து கூட தொடர முடியும்.
இதற்கு முன் ஒரு முறை நிறுத்திவிட்டால் அந்த மெசேஜ்ஜை அனுப்பிவிட வேண்டும் அல்லது டெலிட் செய்துவிட வேண்டும் என்ற இரண்டு தேர்வுகள் மட்டுமே இருந்தன.
இந்த மாத தொடக்கத்தில் வாட்ஸ்ஆப் பீட்டா பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்த இந்த அம்சம் தற்போது ஐ.ஓஎஸ் பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. விரைவில் ஆண்ட்ராய்டு போன் பயனர்களுக்கும் இந்த சேவை அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் வாட்ஸ்ஆப், பயனர்கள் வாட்ஸ்ஆப் அழைப்புகளில் எளிதாக இணைவதற்கு லிங்க் அனுப்பும் அம்சத்தையும் கொண்டுவரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ALSO READ : முகநூலில் உளவு பார்ப்பவர்களை தடுப்பது எப்படி? எளிமையான டிப்ஸ்
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment