நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

எவ்ளோ பெரிய தழும்பா இருந்தாலும் ஐந்து நிமிடங்கள் இதை போட்டா மறைஞ்சிடும்!

 நீண்ட நாட்களாக மறையாமல் உள்ள தழும்புகளை மறைய வைக்கும் சக்தி காபிக்கு உண்டு.


காபி அழகு துறையில் ஒரு பிரபலமான பொருளாக மாறிவிட்டது.

காஃபின் உங்கள் திசுக்களை ஊடுருவி, அவைகளுக்கு உறுதியளிக்கிறது.இது புதிய தழும்புகள் ஏற்படுவதைக் குறைகிறது.

ஸ்கிரப் செய்யும் முறை

தேவையான பொருட்கள்


  1. 5 தேக்கரண்டி அரைக்கப்பட்ட காபி கொட்டைகள் (75 கிராம்)
  2. 3 தேக்கரண்டி ஆர்கானிக் தேங்காய் எண்ணெய் (45 கிராம்)
  3. 1 தேக்கரண்டி அலோவேரா (கற்றாழை) ஜெல் (15 கிராம்)
  4. 2 தேக்கரண்டி மினரல் வாட்டர் (30 மிலி)
  5. மர கரண்டி

செய்முறை

ஒரு கண்ணாடி ஜாடிக்குள் அரைத்த காபித்தூள், தேங்காய் எண்ணெய், அலோ வேரா ஜெல் மற்றும் தண்ணீர் சேர்த்து கலக்குங்கள்.

ஒரு மென்மையான பேஸ்ட் கிடைக்கும் வரை ஒரு சில நொடிகள் கலவையை பெற ஒரு மர ஸ்பூன் கொண்டு நன்கு கலக்குங்கள்.

குளிர்ந்த மற்றும் இருண்ட இடத்தில் ஜாடியை இருக்க மூடி பத்திரப்படுத்துங்கள்.


பயன்படுத்தும் முறை

வடுக்கள் மற்றும் தழும்புகள் உள்ள பகுதிகளில் பாதிப்பு அளவை பொறுத்து இந்த களிம்பை நன்கு தேய்க்கவும்.

ஐந்து நிமிடங்கள் மென்மையான மசாஜ் செய்து, பின்னர் அதை மற்றொரு 20 நிமிடங்களுக்கு விட்டு விடுங்கள்.


பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இதை வாரத்துக்கு 2 முறை அல்லது நேரம் கிடைத்தால் தினமும் கூட செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.



also read : இனி ஆரஞ்சு பழத்தின் தோலை தூக்கி வீசாதிங்க.. முகத்திற்கு இப்படி கூட பயன்படுத்தலாம்!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!