நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

குதிரைப் பந்தயம் உருவானது எப்படி?

 முதன்முதலாக குதிரைப் பந்தயம் இங்கிலாந்து நாட்டில் 12-ம் நூற்றாண்டில் நடத்தப்பட்டது.


குதிரையை முதன்முதலாகப் பயன்படுத்தியவர்கள் எகிப்தியர்கள். குதிரையை சரியான முறையில் பழக்கி தங்களின் எண்ணங்களுக்கு ஏற்ப செயல்பட வைத்தவர்கள் சிவப்பிந்தியர்கள்.

குதிரையைப் போர்களுக்குப் பயன்படுத்திய பெருமை இந்திய அரசர்களைச் சாரும். உலக நாடுகள் குதிரையை விளையாட்டாகப் பயன்படுத்தத் தொடங்கினர். இதன் விளைவாக தோன்றியதுதான் குதிரைப் பந்தயங்கள்.

எகிப்து, பாபிலோனியா, சிரியா போன்ற இடங்களில் குதிரைப் பந்தயம் நடைபெற்றது. முதன்முதலாக குதிரைப் பந்தயம் இங்கிலாந்து நாட்டில் 12-ம் நூற்றாண்டில் நடத்தப்பட்டது.

அரேபியா, துருக்கி, பெர்சியா ஆகிய நாட்டு வணிகர்கள் குதிரைகளை இறக்குமதி செய்து பந்தயத்திற்குப் பயன்படுத்தினர். அரேபிய நாட்டுக் குதிரைக்கு மவுசு அதிகம். 18-ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் குதிரைப் பந்தயம் மிகவும் முக்கிய இடத்தைப் பிடித்தது. குதிரைப் பந்தயத்திற்காக 1751-ம் ஆண்டு சட்டங்கள் இயற்றப்பட்டன. 1793-ம் ஆண்டு குதிரைப் பந்தயம் குறித்த முதல் செய்தித்தாள் வெளியானது.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!