முருங்கைக்காய் ஏன் சாப்பிட வேண்டும்? அதிலுள்ள பலன்கள் பற்றி தெரியுமா?
- Get link
- X
- Other Apps
நம் வீடுகளில் மிக சாதாரணமாக காணப்படும் முருங்கை மரத்தை மருத்துவ பொக்கிஷம் என்றே கூறலாம்.
இதன் அனைத்து பாகங்களும் மருத்துவ குணங்கள் கொண்டவை, இதன் காய் மற்றும் இலைகளில் வைட்டமின் சி அதிகமாக இருக்கிறது.
குறிப்பாக முருங்கை காயில் விட்டமின்கள் ஏ, பி1(தயாமின்), பி2(ரிபோஃப்னோவின்), பி3(நியாசின்), பி6(பைரிடாக்ஸின்), ஃபோலேட்டுகள் ஆகியவை காணப்படுகின்றன.
இதில் கால்சியம், இரும்புச்சத்து, மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ், செலீனியம், துத்தநாகம், பொட்டாசியம், குறைந்த எரிசக்தி, அதிகளவு நார்சத்து, கார்போஹைட்ரேட், புரதச்சத்து, அமினோ அமிலங்கள் மற்றும் தாது உப்புக்கள் நிறைந்திருக்கின்றன.
நன்மைகள் என்னென்ன?
* மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாகிறது
* உடலுக்கு நல்ல வலுவை கொடுப்பதுடன் சிறுநீரகத்தை பலப்படுத்துகிறது, வாரத்தில் குறைந்தது இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடையும்.
* முருங்கைக்காய் விதைகளை குழந்தைகள் சாப்பிட்டால் மலக்குடல்களில் இருக்கும் கிருமி பூச்சிகள் வெளியேறும்.
* ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி உடலை புத்துணர்ச்சியுடன் வைக்கிறது.
* தொண்டை கரகரப்பு, சளி மற்றும் தொண்டை புண் ஆகியவற்றை சரிசெய்கிறது.
* ஆஸ்துமா, கல்லீரல் மற்றும் கணைய வீக்கம் போன்றவற்றை குணப்படுத்துகிறது.
* கீல்வாதம் மற்றும் மூட்டு வலியால் அவதிப்படும் நபர்களுக்கு நிவாரணம் அளிக்கிறது.
யாரெல்லாம் சாப்பிடலாம்?
மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள், சளி பிரச்சனை உள்ளவர்கள், ரத்தசோகை, வயிற்றில் புழு பிரச்சனை உள்ளவர்கள், கணையம், கல்லீரலில் வீக்கம் உள்ளவர்கள் முருங்கைக்காயை சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை உள்ளவர்களும் ஹைப்போடென்ஷன் பிரச்சினை உள்ளவர்களும் முருங்கை இலை, முருங்கை கீரை ஆகியவற்றை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளலாம்.
ALSO READ : பற்களின் பின் இருக்கும் மஞ்சள் கறையைப் போக்க இந்த ஒரே ஒரு வழி போதும்.... இனி வாய்விட்டு சிரிக்கலாம்!
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment