சூடான மொறு மொறு சீஸ் பூரி செய்வது எப்படி தெரியுமா?
- Get link
- X
- Other Apps
கோதுமை மாவு மற்றும் சீஸ் இருக்கிறதா? அப்படியானால் அதைக் கொண்டு ஒரு அற்புதமான சீஸ் பூரி செய்து ருசியுங்கள்.
கீழே சீஸ் பூரி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்
- கோதுமை மாவு - 1 கப்
- ரவை - 2 டேபிள் ஸ்பூன்
- உப்பு - சுவைக்கேற்ப
- எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
- தண்ணீர் - தேவையான அளவு
- எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
உள்ளே வைப்பதற்கு...
- சீஸ் - 1 கப் (துருவியது)
- வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
- பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
செய்முறை
ஒரு பௌலில் கோதுமை மாவு, ரவை, உப்பு, 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
பின் அந்த மாவை ஈரத் துணியால் மூடி 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு உள்ளே வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் ஒரு பௌலில் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு சிறிது மாவை எடுத்து உருட்டி, அதை சப்பாத்தி போன்று தேய்த்து, அதன் நடுவே சிறிது சீஸ் கலவையை வைத்து மூட வேண்டும்.
பின் அதை மீண்டும் தட்டையாக பூரி அளவிற்கு தேய்த்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இதேப் போன்று அனைத்து மாவையும் தேய்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தேய்த்து வைத்துள்ள பூரிகளை ஒவ்வொன்றாக சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சீஸ் பூரி தயார்.
ALSO READ : கோடை வெயிலுக்கு உடலுக்கு குளிர்ச்சி தரும் மசாலா மோர்! எப்படி தயாரிப்பது?
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment