நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தொப்பை கிடுகிடுவென குறைய வேண்டுமா? காலை உணவாக இதை கட்டாயம் எடுங்க...........

 பொதுவாக ஆரோக்கியமான மற்றும் சத்தான காலை உணவுடன் காலை தொடங்குவது, நாள் முழுவதும் உங்களுக்கு ஆற்றலை அளிக்கிறது.


அதிலும் நீங்கள் காலையில் சத்தான காலை உணவை சாப்பிட்டால், அது எடை குறைக்க உதவுகிறது. ஏனெனில் இன்று பலரும் தொப்பை பிரச்சினை போன்றவற்றால் அவதியுற்று வருகின்றது.

இவர்கள் காலையில் நல்ல சத்துள்ள உணவுகளை உண்ணுவதே நல்லது. அந்தவகையில் தற்போது தொப்பை குறைக்க காலை உணவாக எதை சாப்பிடலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

முட்டை

காலை உணவாக முட்டை சாப்பிடலாம். நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் முட்டை தான் சிறந்த வழி.   


தயிர்

தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் உங்கள் குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மேலும் இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடல் எடையை குறைக்கிறது.


 உப்புமா

ரவையில் இயற்கையாகவே கொழுப்பை குறைக்கும் ஆற்றல் உள்ளது மற்றும் நல்ல கொழுப்பு உள்ளதால், உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ராலையும் அதிகரிக்கிறது.


பருப்பு

பருப்பு புரதத்தின் நல்ல ஆதாரமாகக் கருதப்படுகிறது. உடல் எடையை குறைப்பதிலும், உடல் பருமனை குறைப்பதிலும் புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது.  





ALSO READ : கொலஸ்ட்ராலைக் குறைக்க, இதை கட்டாயம் உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!