உங்கள் சரும ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வதற்கு உங்கள் உணவை மாற்றியமைப்பது சிறந்த வழியாகும். உங்கள் உணவில் பாதாம் போன்ற ஆரோக்கியமான உணவுகளைச் சேர்ப்பது வறட்சியைத் தடுக்க உதவுகிறது மற்றும் எவ்வளவு குளிராக இருந்தாலும் ஆரோக்கியமான, பளபளப்பான சருமத்தை அடைய முடியும்
குளிர்காலம் உண்மையில் பலவித பாதிப்புகளை நமது சருமத்திற்கு உண்டாக்கும். குளிர்ந்த காலநிலையின் காரணமாக வறண்ட காற்று நமது தோலில் இருந்து ஈரப்பதத்தை இழக்க செய்யும். குளிர் பருவத்தில் ஈரப்பதம் குறைவாக இருப்பதன் விளைவுதான் மெல்லிய மற்றும் உலர்ந்த திட்டுகள் சருமத்தில் ஏற்பட காரணம். எந்த அளவு லோஷன்கள் மற்றும் மாய்ஸ்சரைசர்களைப் பயன்படுத்தினாலும், சருமம் வறண்டு, மந்தமானதாகவே இருக்கும்.
குளிர்காலத்தில் தோலை உள்ளே இருந்து பாதுகாப்பது மிகவும் அவசியம். பொதுவாக வறண்ட சருமத்தை ஈரப்பதமாக வைக்க எண்ணற்ற புராடக்ட்களை பயன்படுத்துவோம். ஆனால், இவை நீண்ட காலத்திற்கு சருமத்திற்கு அவ்வளவு நல்லதல்ல என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த பருவத்தில் உங்கள் சரும ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வதற்கு உங்கள் உணவை மாற்றியமைப்பது சிறந்த வழியாகும். உங்கள் உணவில் பாதாம் போன்ற ஆரோக்கியமான உணவுகளைச் சேர்ப்பது வறட்சியைத் தடுக்க உதவுகிறது மற்றும் எவ்வளவு குளிராக இருந்தாலும் ஆரோக்கியமான, பளபளப்பான சருமத்தை அடைய முடியும் என்று மருத்துவர்கள் மற்றும் அழகுக்கலை நிபுணர்கள் கூறுகின்றனர்.
உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க இந்த மூன்று குளிர்கால உணவுகளை அவசியம் சாப்பிட்டு வாருங்கள்.
பாதாம் :
குளிர்காலத்தில் பாதாம் சருமத்திற்கு சிறந்தது. இது ஒரு ஆரோக்கியமான சிற்றுண்டியாக இருப்பதால், அதன் ஊட்டச்சத்து மதிப்பு காரணமாக சரும அழகுக்காகவும் பயன்படுத்தலாம். பாதாம் பருப்பை தினமும் உட்கொள்வது ஒட்டுமொத்த சரும ஆரோக்கியத்திற்கும் பல வழிகளில் நன்மை தரும்.
இதில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை நிறைந்துள்ளது. இது வயதான எதிர்ப்பு பண்புகளை வழங்குவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது சருமத்தை ஈரப்பதமாக வைக்கவும் உதவுகிறது.
மேலும், தோல் வறண்டு போகாமல் தடுக்கிறது. பாதாமில் உள்ள வைட்டமின் ஈ சூரியனின் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. ஊறவைத்த பாதாமை சாப்பிடுவது உங்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
எனவே, நீங்கள் தினமும் இரவில் பாதாமை ஊறவைத்து காலையில் சாப்பிடலாம். நீங்கள் உங்கள் சூப்கள் மற்றும் சாலட்களிலும் பாதாமை சேர்க்கலாம்.
அவகேடோ :
அவகேடோ பழத்தில் வைட்டமின் ஈ மற்றும் ஆரோக்கியமான எண்ணெய்கள் நிரம்பியிருப்பதால் சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இவை சருமத்திற்கு ஆழமாக ஊட்டமளித்து, ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். அவகேடோ பழத்தில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது. மேலும் இவை பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருக்கின்றன. கூடுதலாக, அவகேடோ பழத்தில் உள்ள குளுட்டமைன் அமினோ அமிலம் சருமத்தை சுத்தப்படுத்தவும், பல்வேறு சுற்றுச்சூழல் காரணிகளிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கவும் உதவுகிறது. அவகேடோவை சாலட்டில் சேர்ப்பதோடு மட்டுமல்லாம் அவகேடோ சூப், அவகேடோ ஷேக் போன்றவற்றிலும் சேர்த்து சாப்பிடலாம்.
முளைக்கீரை :
பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, இந்த ஸ்பினாச் என்கிற முளைக்கீரையில் ஒட்டுமொத்த தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பண்புகள் உள்ளது. இதில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி அதிகம் இருக்கின்றன. இது சரும அழகை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் தோல் நோய்த்தொற்றுகளை குணப்படுத்த உதவுகிறது. அத்துடன் இது உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் சருமத்தை சுத்தம் செய்ய உதவுகிறது. கீரையில் காணப்படும் இரும்புச்சத்து இரத்த சோகையை எதிர்த்துப் போராடுகிறது. மேலும் இதில் உள்ள லுடீன், சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது. முளைக்கீரையை உங்கள் சாலடுகள், சூப்கள் மற்றும் பிற உணவுகளில் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.
உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் குளிர் காலத்தில் வைத்துக்கொள்ள இந்த அற்புதமான உணவுகளை உங்கள் உணவில் சேர்க்க மறக்காதீர்கள்!
Comments
Post a Comment