நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சொட்டை விழுந்த பகுதியில் உடனே முடி வளர! எளிதான டிப்ஸ்....

 தலைமுடி உதிர்வு பிரச்சனையை பலரும் தற்போதைய காலக்கட்டத்தில் சந்திக்கின்றனர்.

நல்ல உணவு பழக்கங்கள், நிம்மதியான உறக்கம் மற்றும் மன அமைதி இருந்தாலே இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

சரி, வழுக்கை/சொட்டை விழுந்த இடத்தில் முடி வளர என்ன செய்யலாம்?

ஆமணக்கு மூலிகை எண்ணெய்

இதன் மருத்துவ குணத்தால் தலை முடி வேர் பகுதியை தூண்டி, தலை முடி நன்கு வளர செய்வதுடன் இரத்த ஓட்டத்தை அதிகரித்து தலைமுடி வேர்பகுதியை உறுதிப்படுத்துகிறது. ஆமணக்கு எண்ணெயை கொஞ்சம் சூடுபடுத்தி, இரவு தூங்குவதற்கு முன் தலைக்கு தேய்த்து விட்டு தூங்கவும். 

கற்றாழை

வாரத்தில் இரு முறை இந்த கற்றாழையை தலைக்கு தேய்த்து குளிப்பதினால் பொடுகு மற்றும் வறட்சியின் காரணமாக முடி உதிர்தல் போன்றவை குணமாகும். வழுக்கை விழுந்த இடத்தில் இந்த கற்றாழையை 15 நிமிடம் மசாஜ் செய்தால் தலை முடி வேர்களுக்கு மறுபிறப்பு கொடுக்கும். 

இஞ்சி

இஞ்சியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அவற்றை ஆலிவ் எண்ணெயில் ஊறவைத்து சிறிது நேரம் கழித்து சொட்டை விழுந்த இடத்தில் தடவும். இவ்வாறு இந்த முறையை வாரத்தில் இரு முறை செய்து வந்தால் சொட்டை விழுந்த இடத்தில் முடி வளருமாம். 


வெந்தயம்

உடல் உஷ்ணத்தால் முடி உதிர்வதை கட்டுப்படுத்த இந்த வெந்தயம் மிகவும் உதவுகிறது என்பதால், வாரத்தில் ஒரு முறை வெந்திய பொடியை 3 ஸ்பூன் எடுத்து கொண்டு பாலில் கலந்து தலை தேய்த்து குளித்தால் சொட்டை விழுந்த இடம் மறைந்து போகும்.



ALSO READ : உடல் எடையை மளமளவென குறைக்கனுமா? நெல்லிக்காயை இப்படி சாப்பிடுங்க போதும்....

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!