நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பிரசாதம்தான் முக்கியம்... இந்திய கோயில்களின் 5 வித்தியாசமான பிரசாதங்கள் இதோ!

 பெருமாள் கோவில் புளியோதரையும், அனுமார் கோவில் மிளகு வடையும் வீட்டில் சாப்பிட்டால் அவ்வளவு ருசிக்காது. கோவிலில் கொடுப்பதே தனி சுவை தான். 

பக்தியால் கோயிலுக்கு செல்லும் மக்களின் மத்தியில் என்னை போன்ற சிலர் பிரசாதம் சாப்பிடவே கோவிலுக்கு செல்வர். பெருமாள் கோவில் புளியோதரையும், அனுமார் கோவில் மிளகு வடையும் வீட்டில் சாப்பிட்டால் அவ்வளவு ருசிக்காது. கோவிலில் கொடுப்பதே தனி சுவை தான். பாய்ஸ் பட செந்தில் கண்முன் வந்துபோனாலும் தப்பில்லை. அப்படி வித்தியாசமாக தனித்துவமான கோயில் பிரசாதங்களை பாப்போம்.

பூரி ஜெகநாதர் கோவிலை அன்ன க்ஷேத்திரம் என்று சொல்வார்கள். நாட்டின் மிகப்பெரிய அன்னதான கூடம் அங்கு தான் உள்ளது. எந்நேரம் போனாலும் சாப்பாடு உண்டு என்பது அங்கு உண்மை என்று புரியும். அந்த கோவிலில் வழங்கும் காஜா இனிப்பின் தித்திப்பு நாக்கை விட்டு போகவே நாலு நாள் ஆகும்.


கடலை மாவு, நெய், சர்க்கரை, உலர் திராட்சை, முந்திரி பருப்பு எல்லாம் போட்டு நம்ம ஊர் லாலா ஸ்வீட் கடைகளில் செய்தால்கூட அப்படி ஒரு தனித்துவ சுவை வராது. லட்டு என்றாலே அது திருப்பதி லட்டுதான். அதன் சுவையும் மணமும் அந்த குபேரனையே கடனாளி ஆக்கிவிடும்


வெண்ணை திருடி தின்ற கிருஷ்ணன் கதைகளை நாம் கேட்டிருப்போம். அதையே பிரசாதமாக கொடுப்பதை பார்த்திருக்கிறீர்களா? பிருந்தாவனத்தில், துவாரகையிலும் உள்ள கிருஷ்ணர் கோவில்களில் காலை பூஜையின் போது கடைந்து எடுத்த வெண்ணையை பிரசாதமாக தருவார்கள்.


எப்போதாவது ஜம்மு போக நேர்ந்தால் அங்குள்ள வைஷ்ணவோ தேவி கோவில் போக மறக்காதீர்கள். அங்கே முர்முரா(சாத உருண்டை), இலைச்சிடானா அல்லது சர்க்கரை உருண்டைகள், சில உலர்ந்த பழங்கள் மற்றும் வெயிலில் உலர்த்திய ஆப்பிள்களைப் பிரசாதமாகப் பெறுவீர்கள். உலர்ந்த ஆப்பிள்கள் மாதா வைஷ்ணோ தேவியின் தனித்துவமான பிரசாதமாகும்


காசியில் உள்ள புகழ்பெற்ற ஹனுமான் கோயில் கோஸ்வாமி கவிஞர் துளசிதாஸ் ஜி என்பவரால் கட்டப்பட்டது. இங்கே அவர் ஹனுமனை பார்த்ததாக கதைகள் உண்டு. இங்கே 2 வகையான லட்டுகள் வழங்கப்படுகிறது. ஒன்று கடலை மாவு செய்த லட்டு. மற்றொன்று பாலை சுண்ட வைத்து செய்யப்படும் லால் பேடா. நாவில் பட்டதும் கரைந்ததோ என்று நினைக்க வைக்கும்.












Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்