பெண்களே! இளஞ்சிப்பு உதடுகளை பெற வேண்டுமா? இந்த பொருளை இப்படி யூஸ் பண்ணுங்க.....
- Get link
- X
- Other Apps
பொதுவாகவே பீட்ரூட் சமையல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி உதடு பராமரிப்பில் ஒரு முக்கிய பொருளாக விளங்குகின்றது.
பீட்ரூட்டை உங்களது உதடுகளின் மேல் தடவும் போது, கருமையான உதடுகளைப் போக்கவும், உங்களது உதடுகளை பிரகாசமாகவும், வெளிர் நிறமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
இதனை தொடர்ந்து உதடுகளுக்கு பயன்படுத்தி வந்தால் நிச்சயம் இளஞ்சிவப்பு நிற உதடுகளை நீங்கள் எவ்வித கெமிக்கலும் இல்லாமல் பெற முடியும்.
தற்போது இதனை எதனுடன் சேர்த்து பயன்படுத்துவது என்பதை இங்கே பார்ப்போம்.
பயன்படுத்தும் முறை
* பீட்ரூட்டை நன்றாக அரைத்துக் கொண்டு அதனுடன் சர்க்கரைக் கலந்து பேஸ்ட் செய்து இதனுடன் சிறிதளவு ஆலிவ் எண்ணெய் சேர்த்து உதட்டில் தடவி வரலாம்.
* முதலில் ஒரு துண்டு பீட்ரூட்டை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். 15 முதல் 20 நிமிடங்களுக்கு பிறகு எடுத்துவிட்டு அதை உதடுகளில் தேய்க்கவும். சில நிமிடங்களுக்கு நீங்கள் இவ்வாறு செய்தால் போதும் உங்களது உதடும் இயற்கையான ரோஜா நிறத்திற்கு மாறிவிடும்.
* பீட்ரூட்டை பேஸ்ட் போல உருவாக்கி பின்னர் இதோடு சிறிதளவு எலுமிச்சை சாறு, ரோஸ் வாட்டர் மற்றும் சிறிது ப்ரெஷ் கிரீம் பால் சேர்க்க வேண்டும். இதை நீங்கள் உதடுகளில் தடவி 20 நிமிடங்களுக்கு அப்படியே வைத்திருந்து பின்னர் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் நல்லது.
ALSO READ : ஆரோக்கியம் காக்கும் சீசனிங் மூலிகைகள் ....
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment