நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கொண்டைக்கடலை முட்டை பொரியல்.....

 இதில் புரோட்டின் சத்து அதிகம் உள்ளது.

இந்த சுண்டல், வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது.


தேவையான பொருட்கள் :

 கருப்பு கொண்டைக்கடலை - 100 கிராம்
 வெங்காயம் - 1 
பச்சை மிளகாய் - 3
முட்டை - 3 
மிளகுத் தூள், சீரகத் தூள் - தலா ஒரு டீஸ்பூன்
 ஆலிவ் எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன் 
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
 உப்பு - தேவையான அளவு

செய்முறை :

 வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். கொண்டைக் கடலையை முதல் நாள் இரவே ஊற வையுங்கள். 

மறுநாள் அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து குக்கரில் போட்டு வேக வையுங்கள்.

 வாணலியில் தேவையான எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள்.

 வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் மூன்று முட்டைகளை உடைத்து ஊற்றி, அதனுடன் மிளகுத் தூள், சீரகத் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கிளறுங்கள். 

முட்டை உதிரியாக வந்ததும் வேக வைத்த கடலையைச் சேர்த்து சிறு தீயில் சிறிது நேரம் வையுங்கள்.

 கடைசியாக கொத்தமல்லித் தழையைத் தூவி அலங்கரியுங்கள். புரோட்டின் சத்து அதிகம் உள்ள இந்த சுண்டல், வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது.






Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்