உப்பலான பசலைக்கீரை பூரி... இனி வீட்டிலேயே செய்து அசத்துங்கள்.....
- Get link
- X
- Other Apps
பூரி யாருக்கு தான் பிடிக்காது.அதுவும் மொறு மொறு சுவையில் இருந்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
மிருதுவாக மற்றும் இல்லாமல் ஆரோக்கியமாக பூரி செய்ய பசலைக்கீரையுடன் சேர்த்து செய்து ருசியுங்கள்.
பசலைக்கீரை இதயநோய் முதல் குழந்தைகளுக்கு வரும் சில நரம்பு வியாதிகள் வரை அனைத்தினையும் தடுக்கிறது. இதில் அதிகமாக பச்சையம் உள்ளது. இந்த பச்சையமானது உடலில் கொழுப்பை கரைக்கும் தன்மையுடையது.
எனவே ஆரோக்கியமான பூரியை செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களை மகிழ்வியுங்கள்.
தேவையான பொருட்கள்
- பசலைக்கீரை - 1 கட்டு
- கோதுமை மாவு - 1 கப்
- சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
- கரம் மசாலாத்தூள் - சிறிதளவு
- ப.மிளகாய் - 1
- மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
- எண்ணெண், உப்பு - தேவையான அளவு
செய்முறை
பசலைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பசலைக்கீரையை கொட்டி வதக்கவும்.
அதனுடன் பச்சை மிளகாயையும் சேர்த்து வதக்கி ஆறியதும் விழுதாக அரைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் அரைத்த கீரை விழுது, கரம் மசாலா துள், சீரகத்தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள, உப்பு சேர்த்து நன்றாக கலந்து தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
மாவு மிருதுமான பதத்திற்கு வந்ததும பூரிகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
இதற்கு உருளைக் கிழங்கு பிரட்டல் நன்றாக இருக்கும்.
ALSO READ : பூண்டு தண்ணீரை இப்படி குடித்தாலே போதும்! பல நோய்கள் காணாமல் போகும்....
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment