காலை நேர உடற்பயிற்சி செய்தால் இவ்வளவு நன்மை கிடைக்கின்றதா?
- Get link
- X
- Other Apps
உடற்பயிற்சி என்பது உடல் ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பல வகையான தேவைப்பாடுகளுக்குப் பல வகையான உடற்பயிற்சிகள் உள்ளன.
சில உடற்பயிற்சிகள் ஆரோக்கியமான உடல் நலத்துக்கும், சில உடற்பயிற்சிகள் நோயைக் குணப்படுத்தவும் உதவும்
ஒரு நாளைக்குக் குறைந்தது 10 முதல் 50 நிமிடங்கள் வரை உடற்பயிற்சியில் ஈடுபடுவது நல்லது.
அதிலும் காலைநேரத்தில் உடற்பயிற்சி செய்வது பல ஆரோக்கிய நன்மைகளை உடலுக்கு வழங்குகின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம் வாங்க.
* காலைநேர உடற்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நடைப்பயிற்சி ஆகியவற்றால் மூளையில் உள்ள மகிழ்ச்சியைத் தூண்டும் ஹார்மோன்களான செரோடோனின், நோர்பினேப்ரைன், எண்டார்பின், டோபமைன் ஆகியவை அதிகரிக்கின்றன. இதனால், நாள் முழுவதும் மனம் புத்துணர்ச்சி பெறுகிறது.
* 10 நிமிட 'வார்ம் அப்' பயிற்சி செய்தால் மூலமாகவே ரத்தத்தில் சர்க்கரை அளவு கணிசமாகக் குறையும். இதய ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் சீராகும். எனவே, ஒரு நாளைக்குக் குறைந்தது 10 முதல் 50 நிமிடங்கள் வரை உடற்பயிற்சியில் ஈடுபடலாம்.
* உடற்பயிற்சி செய்வதால், உடல் முழுவதும் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் ரத்தத்துக்குப் போதுமான ஆக்சிஜன் கிடைக்கிறது.
* உடற்பயிற்சியானது வாழ்நாளை அதிகரிப்பதோடு, உடல் முதுமை அடைந்து தோல் சுருக்கம் விழுவதைத் தாமதப்படுத்துகிறது.
* காலை உடற் பயிற்சி, மூளையின் செயல்திறனுக்கு உதவுகிறது. இதனால், மூளையின் நியூரான்கள் தூண்டப்பட்டு நினைவுத்திறன் மேம்படும்.
* 50 வயதுக்கு மேற்பட்டவர் களுக்கு நினைவுத்திறன் குறைபாட்டால் அல்சைமர் நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவர்கள் முறையான காலை உடற்பயிற்சி மூலம் அல்சைமரின் தாக்கம் குறையும்.
ALSO READ : 1300 கலோரிகளை எரிக்கும் 10 நிமிட ஸ்கிப்பிங் பயிற்சி.......
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment