நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

முகத்தில் உள்ள பழுப்பு நிறத் திட்டுக்கள் மறையனுமா? கத்தரிக்காயை இப்படி பயன்படுத்தி பாருங்க....

 பொதுவாக நம்மில் பலருக்கு அங்காங்கே முகத்தில் பழுப்பு நிறத்தட்டுக்கள் காணப்படும். இது சருமத்தில் சீரற்ற மெலனின் விநியோகத்தால் பழுப்பு நிறத் திட்டுக்கள் தோன்றுகிறது.

இது பார்ப்பதற்கே அசிங்கமாக காணப்படும். இதனை போக்க செயற்கை பொருட்கள் தான் வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு சில இயற்கை பொருட்கள் கூட பயன்படுத்தலாம்.

அதில் கத்தரிக்காய் பெரிதும் உதவுகின்றது. இதனை தொடர்ந்து பத்து நாட்கள் இதனைப் பயன்படுத்துவதால் ஒரு நல்ல மாற்றத்தை உங்களால் உணர முடியும்.

தற்போது இதனை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.


* கத்திரிக்காயை எடுத்து வட்ட வடிவத்தில் 1/4 இன்ச் அடர்த்திக்கு நறுக்கிக் கொள்ளவும். 

* நறுக்கிய கத்திரிக்காய்த் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து திட்டுக்கள் இருக்கும் இடங்களில் சுழல் வடிவத்தில் 3-5 நிமிடங்கள் தடவவும். தாவர ஊட்டச்சத்துகள், வைட்டமின், மினரல் போன்ற சருமத்திற்கு ஏற்ற ஊட்டச்சத்துகள் கத்திரிக்காயில் அதிகமாக இருப்பதால் சருமத்திற்கு சிறந்த நன்மையைத் தருகிறது.

* இந்த கத்திரிக்காய் சாறு உங்கள் முகத்தில் தொடர்ந்து 15 நிமிடங்கள் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். பிறகு வெதுவெதுப்பான நீர் கொண்டு முகத்தைக் கழுவவும். குறைந்தபட்சம் ஒரு வாரம் தொடர்ந்து இதனைச் செய்து வருவதால் சிறு அளவு மாற்றத்தை உங்களால் நிச்சயம் உணர முடியும். எனவே தொடர்ந்து இதனைப் பின்பற்றுவதால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.   





Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!