ஆற்று மீன் VS கடல் மீன் ! எதில் ஊட்டச்சத்து அதிகம்? அவசியம் தெரிஞ்சிகோங்க.......
- Get link
- X
- Other Apps
பொதுவாக மீன் உணவு உணவு அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்தாக கருதப்படுகின்றது.
மீனில் புரதச் சத்து மிகவும் அதிகம், மற்றும் கொழுப்பு மிகவும் குறைவு. இதனால் அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஓர் உணவாக மீன் உள்ளது.
அதிலும் கடல் மீன், ஆற்று மீன், ஏரி மீன்கள் போன்றவை வளர்வது வெவ்வேறு சூழலில் உள்ள நீர் நிலைகளில்தான் என்றாலும் அவற்றில் உள்ள ஊட்டச்சத்துகள் பெரும்பாலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் என்று கூறப்படுகின்றது.
இருப்பினும் இதில் இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்னென்ன என்று இங்கே தெரிந்து கொள்வோம்.
ஆற்று மீன்
ஆற்று மீன், ஏரி மீன்கள் எல்லாம் ஆறு, குளம், ஏரிகளில் உள்ள புழு, பூச்சிகளை உணவாக உட்கொண்டு வளரும்.
ஆற்று மீன்களில் இந்தக் கொழுப்பு அமிலம் காணப்படுவதில்லை. குறிப்பாகக் கடல் மீன்களில் பெரிய மீன்களைவிடச் சிறிய மீன்களில்தான் இந்த ஒமேகா-3 நிறைந்துள்ளது.
உதாரணமாக மத்தி, காணங்கெளுத்தி, சங்கரா போன்ற மீன்களில் ஒமேகா-3 அதிகம் உள்ளது. இந்த ஒமேகா-3 உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்துக்கும் மிகவும் சிறந்தது. இது உடலில் ரத்தம் உறையாமல் பார்த்துக்கொள்கிறது.
இதயம், மூளை போன்றவற்றின் ஆரோக்கியத்துக்கும், மூட்டு வலியால் அவதிப்படுவோருக்கும் இந்தக் கொழுப்பு அமிலம் ஒரு சிறந்த நிவாரணியாக உள்ளது.
மீன் எண்ணெய் மற்றும் மீன் மாத்திரைகள் இந்த ஒமேகா-3 கொழுப்பு அமிலத்திலிருந்துதான் தயாரிக்கப்படுகின்றன.
கடல் மீன்
கடல் மீன்கள் கடலில் வளரும் கடல்பாசிகளை உட்கொண்டு வளர்வதால் அவற்றில் ஒமேகா-3 போன்ற குறிப்பிட்ட சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன.
கடல்பாசிகளில் ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலமும் (Fatty Acid), புரதச் சத்தும் அதிகம் உள்ளது. எனவே, இவற்றைச் சாப்பிட்டு வளரும் கடல் மீன்களிலும் ஒமேகா-3 உள்ளது.
உப்பு நீரில் வளர்வதால், கடல் மீனின் உடலில் சோடியத்தின் அளவு அதிகமாக இருக்கும். அதே போல கால்சியமும் அதிகமாக இருக்கும். கடல் மீன்கள், சிப்பி, இறால், கடல் பாசிகள் போன்றவற்றை உண்டு வாழ்வதால், இதயம் மற்றும் மூளைக்கு நன்மை தரும் ஒமேகா 3 அதிகமாக உள்ளது.
முடிவு
கடல்மீனிலும் சரி, குளத்து மீனிலும் சரி உடலுக்கு தேவையான அடிப்படை சத்துகள் நிறைந்தே உள்ளது
ஆற்று மீன்களோடு ஒப்பிடும்போது கடல் மீன்களில் சிறிது உப்பு அதிகமாக இருக்கும் என்பது உண்மைதான் என்றாலும் அவை உடல் ஆரோக்கியத்தை ஒருபோதும் பாதிக்காது.
ALSO READ : எடையை மின்னல் வேகத்தில் குறைக்கும் ஆட்டு ரத்த பொரியல்! வெறும் பத்தே நிமிடத்தில் செய்து ருசிக்கலாம்.....
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment