நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சூடான இட்லிக்கு தொட்டுக்கொள்ள அருமையான காய்ந்த மிளகாய் சட்னி....

 இந்த சட்னி இரண்டு நாட்கள் வரை கெட்டு போகாது. இட்லி தோசைக்குக் தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.


தேவையான பொருட்கள் : 

வரமிளகாய் - 7 அல்லது மிளகாய்த்தூள் 2 தேக்கரண்டி

 வெங்காயம் - 1 

பெரியது தக்காளி - 1 

பெரியது புளி - சிறிது,

 பூண்டு - 5 பல் 

உப்பு- 1 /2 தேக்கரண்டி

தாளிக்க:

 எண்ணெய் - 3 தேக்கரண்டி

 கடுகு - 1 தேக்கரண்டி 

உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி 

பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி

 கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை :

 வெங்காயம் தோல் உரித்து பெரிதாக வெட்டிக்கொள்ளவும் தக்காளியைக்கழுவி பெரிதாக வெட்டிக்கொள்ளவும் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், தக்காளி, புளி, பூண்டு, காய்ந்த மிளகாய் என ஒவ்வொன்றாக போட்டு வதக்கவும்.

 நன்றாக வதங்கியதும் ஆற வைத்து மிச்சியில் போட்டு அதனுடன் உப்பு சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

 கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த அரைத்த சட்னியில் ஊற்றி கிளறி பரிமாறவும்.

 இப்போது காரசாரமான மிளகாய் சட்னி தயார். 

இது இரண்டு நாட்கள் வரை கெடாதிருக்கும் ஆகையால் சுற்றுலா பயணத்திற்கு கூட எடுத்துச்செல்லலாம்.








Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்