நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இந்த இலையை கொதிக்க வைத்து குடிச்சு பாருங்க!! உடலுக்கு பல அற்புத நன்மைகள் தருமாம்....

 நாம் அன்றாடம் பயன்படுத்தும் எலுமிச்சையில் பல அற்புத நன்மைகள் ஒளிந்துள்ளது.

எலுமிச்சை மட்டுமல்ல, அதன் இலைகளும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

இதனை கொதிக்க வைத்து அதன் நீரை உட்கொள்வது உடல்நலம் தொடர்பான பல பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகின்றது.

ஏனெனில் இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி1 , ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஃபிளாவனாய்டுகள், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.

அந்தவகையில் தற்போது அதனை எப்படி பயன்படுத்தலாம்? அதன் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம். 


எப்படி தயாரிப்பது? 

முதலில் தண்ணீரை சூடாக்கி அதில் எலுமிச்சை இலைகளை கொதிக்க வைக்கவும்.

இலைகளை நன்கு வேகவைக்கும்போது, ​​​​அவற்றின் நிறம் அழகற்றதாக மாறும், பின்னர் இந்த தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும்.

இப்போது இந்த தண்ணீரில் சிறிது தேன் கலந்து குடிக்கவும்.



நன்மை 

* எலுமிச்சை இலைகளின் சாறு சிறுநீரக கற்கள் அபாயத்தைக் குறைக்கிறது.

* உங்களுக்கு அடிக்கடி தலைவலி பிரச்சனை இருந்தால், எலுமிச்சை இலை தண்ணீர் குடிப்பது நன்மை பயக்கும். இந்த நீர் ஒற்றைத் தலைவலிக்கும் நிவாரணம் அளிக்கும்.

* எலுமிச்சை இலைகளின் நீர் மன அழுத்தத்தைப் போக்க நன்மை பயக்கும். இதனால் நரம்புத் தளர்ச்சியும் நீங்கும். 

 * எலுமிச்சை இலைகளை குடிப்பது நன்மை பயக்கும். இது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது. இதனால் தூக்கமின்மை நீங்கும்.





Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்