நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உடல் எடையை மளமளவென குறைக்கனுமா? நெல்லிக்காயை இப்படி சாப்பிடுங்க போதும்....

 பொதுவாக நெல்லியின் மருத்துவக் குணங்கள் போல் வேறு எந்த பழத்திலும் இல்லை நமது பெரியவர்கள் கூறுவதுண்டு.

ஏனெனில் இதில் உடலுக்கு தேவையான அனைத்து சத்தக்களுக்களையும் உள்ளடக்கியது.

நெல்லிக்காயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், டானின்கள், பாலிபினால்கள், நார்ச்சத்துக்கள், ஹைப்போலி பிடெமிக் பண்புகள் போன்றவை அதிகளவில் உள்ளது.

இவை அனைத்தும் உடல் எடை குறைப்பிற்கு மிகுந்தப் பயனுள்ளதாக உள்ளது.

எனவே உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் நெல்லிக்காயை கொண்டு எப்படி உடல் எடையை குறைக்கலாம் என்று பார்ப்போம்.    


எப்படி எடுத்து கொள்ள வேண்டும்? 

முதலில் இரண்டு நெல்லிக்காயை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொண்டு மிக்ஸி போட்டு அரைக்கவும்.

நன்றாக அரைப்பதற்காக சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளலாம். இதனையடுத்து வடிகட்டிக் கொண்டு ஒரு டம்ளரில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதை அப்படியே சாப்பிடலாம். சிறிதளவு உப்பு சேர்த்தும் பருகலாம். நெல்லிக்காயில் உள்ள கசப்பு மற்றும் புளிப்பு சுவை பிடிக்கவில்லை என்றால் சிறிதளவவு தேனைக் கலந்து சாப்பிடலாம்.

இது நிச்சயம் உங்களது உடல் எடைக்குறைப்பிற்கு உதவியாக இருக்கும்.  

பலன்கள்

 உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். 

 உடலில் இருக்கும் நச்சுகள் மற்றும் அழற்சியை எதிர்த்துப் போராடுவதோடு வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்க உதவுகிறது. 

 நெல்லியில் உள்ள ஹப்போலிபிடெமிக் பண்புகள் கொழுப்பு கல்லீரல் மற்றும் கொழுப்போடு தொடர்புடைய அறிகுறிகளை எதிர்த்துப் போராடும்.

 உடல் எடையைத் தடுக்கவும், உடலில் உள்ள கூடுதல் கொழுப்பை அகற்றவும் உதவியாக இருக்கும். 





Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்