நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உடல் எடை பிரச்சினையால் கவலையா? இதனை தடுக்க எலுமிச்சம்பழ தேலை இப்படி பயன்படுத்துங்க!

 பொதுவாக நாம் எலுமிச்சையை பயன்படுத்திய பின் அதன் தோலை எடுத்து தூக்கி எறிவோம்.

தூக்கி எறியப்படும் எலுமிச்சை தோலில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற பல சத்துக்கள் உள்ளன.

இது பல நோய்களுக்கு அருமருந்தாக விளங்குகின்றது. குறிப்பாக இது உடல் எடை குறைப்பு பெரிதும் பங்கு வகிக்கின்றது.

இதனை எப்படி பயன்படுத்தலாம் என்பதை இங்கே பார்ப்போம். 


* எலுமிச்சம்பழத் தோலை உலர்த்தி அதன் மிக்சியில் பொடியாக்கிக் கொள்ளவும். இந்த பொடியை காற்று புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும். தேவையானபோது, இந்த பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம்.

* எலுமிச்சையின் தோலை எடுத்து 2 லிட்டர் தண்ணீரில் சுமார் 30 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். அதன் பிறகு அடுப்பை அணைத்து விடவும். கொதித்த வெந்நீரை வடித்து, ஆற வைத்து குக்டிக்கவும்.  

* தினமும் காலையில் எலுமிச்சை தோல் கலந்த வெந்நீரை பருகி வந்தால், உடல் எடை குறையும். அதுமட்டுமல்ல, மலச்சிக்கல், செரிமாண கோளாறு, வாயுக் கோளாறு என பலவித உடல் உபாதைகளும் எட்டியே பார்க்காது.   




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்