பார்லி தண்ணீர் குடிச்சா எடை நிஜமாவே குறையுமா?
- Get link
- X
- Other Apps
பொதுவாக ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளில் ஒன்றாக விளங்குவது பார்லி.
இந்த பார்லி டயட்டில் இருப்பவர்கள், நீரிழிவு நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், இதய கோளாறு உள்ளவர்கள், சிறியவர்கள், பெரியவர்கள், கர்ப்பிணி பெண்கள் என்று அனைவரும் தினமும் சாப்பிட்டு வரலாம்.
அதுமட்டுமின்றி பார்லி நீரை தினமும் குடித்து வந்தால் நம்முடைய ஜீரண மண்டலம் சீராக இயங்கும். ஜீரண சக்தியை மேம்படுத்தும். ஜீரண சக்தியை முறைப்படுத்துவது எடையை குறைப்பதற்கு மிக உதவியாக இருக்கும்.
அந்தவகையில் தற்போது இதனை எப்படி எடுத்து கொண்டால் உடல் எடையை குறைக்க முடியும் என்பதை பார்ப்போம்.
எப்படி எடுத்து கொள்வது?
* அரை கப் பார்லி எடுத்துக் கொண்டால் ஒன்றரை கப் தண்ணீர் சேர்க்க வேண்டும் (ஒன்றுக்கு மூன்று). இந்த நீரில் பார்லி நன்றாக சாதம் போல மென்மையாக குழையும் வரை வேகவைக்க வேண்டும்.
* பார்லி நன்கு வெந்ததும் சாதம் வடிப்பது போல இந்த நீரை தனியே வடித்துக் கொள்ள வேண்டும். இதில் உப்பு மட்டும் சேர்த்து ஆறியதும் கஞ்சி போலவும் குடிக்கலாம்.
* வெறுமனே வடித்த பார்லி நீரை ஆறவைத்து பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டு பத்து நாட்கள் வரை கூட பயன்படுத்தலாம்.
* தினமும் முறையான உடற்பயிற்சி செய்வதோடு இந்த பார்லி நீரை ஒரு கப் அளவுக்கு குடித்து வந்தால் உடல் எடையில் நல்ல மாற்றத்தை உங்களால் உணர முடியும்.
* சுவையை கூட்ட வேண்டுமென்று நினைத்தால் இதில் எலுமிச்சை சாறு, ஆரஞ்சு சாறு, தேன், இலவங்கப்பட்டை பொடி என அவரவர் தேவைக்கும் ருசிக்கும் ஏற்றவாறு சேர்த்துக் கொண்டு குடிக்கலாம்.
ALSO READ : பானை மாதிரி இருக்கும் உங்கள தொப்பை கொழுப்பை குறைக்கனுமா? இந்த 6 முறைகளில் ஒன்றை பின்பற்றுங்க போதும்!
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment