மதிய உணவுக்கு அறுசுவையான Egg Pulao! ருசித்து சாப்பிடுங்கள்....
- Get link
- X
- Other Apps
முட்டை என்றாலே பிடிக்காதவர்கள் இருப்பார்களா என்ன? குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை புரோட்டீன் சத்து நிறைந்த முட்டையை வாரத்தில் குறைந்தது 4 நாட்களாவது சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இதில் நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் மிகுந்த அளவில் அடங்கியுள்ளது, இந்த பதிவில் முட்டையை வைத்து அறுசுவையான Egg Pulao செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி- 1 1/2 கப்
வெங்காயம்- 1 (நீளவாக்கில் நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது- 1 டீஸ்பூன்
நெய்- 2 டீஸ்பூன்
எண்ணெய்- 2 டீஸ்பூன்
பட்டை, பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு- சிறிதளவு
மிளகு - 10
பச்சை மிளகாய்- 2
புதினா, மல்லி- தேவையான அளவு
மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்
கரம் மசாலா - அரை டீஸ்பூன்
மிளகாய் தூள்- ஒரு டீஸ்பூன்
தயிர்- கால் கப்
தண்ணீர் - 2 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
முட்டை மசாலாக்கு
வேகவைத்த முட்டை- 5
மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்
கரம் மசாலா- அரை டீஸ்பூன்
மிளகாய் தூள்- காரத்திற்கு ஏற்ப
செய்முறை
முதலில் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, நெய், எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும், காய்ந்ததும் கிராம்பு, ஏலக்காய், பட்டை, பிரியாணி இலை சேர்த்து வதக்கவும், இதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், இஞ்சி- பூண்டு விழுது சேர்க்கவும்.
நன்றாக வதங்கியதும் மிளகு, பச்சை மிளகாய் சேர்த்து விட்டு, புதினா மல்லி இலை சேர்க்கவும், பின்னர் மசாலா பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
இதனுடன் தயிர் சேர்த்து விட்டு தண்ணீர் சேர்க்கவும், நன்றாக கொதி வந்த பின்னர் அரிசியை சேர்த்து மூடி விடவும்.
நன்றாக வெந்ததும் கிளறிவிட்டால் சுவையான புலாவ் தயாராகிவிடும்.
அடுத்ததாக ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து விட்டு, மசாலாக்களை சேர்த்து வேகவைத்த முட்டையை பொரித்து எடுக்கவும், முட்டைகளை புலாவுடன் சேர்த்து வி்ட்டால் மணமணக்க Egg Pulao தயார்!!!!
ALSO READ ; சூப்பரான வெஜிடபிள் பாஸ்தா பிரியாணி....
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment