நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

என்றும் இளமையுடன் இருக்க ஆசையா? அப்போ வெண்டைக்காயை இப்படி யூஸ் பண்ணுங்க போதும்!

 இன்றைய காலத்தில் பலருக்கு இளமையிலே வயதான தோற்றம் வந்துவிடுகின்றது.

இளமையிலேயே வயதான தோற்றத்தைத் தருவது போன்ற பல காரணங்கள் இருக்கின்றன.

ரசாயனங்கள் நிறைந்த சரும பராமரிப்பு பொருள்கள் பயன்படுத்துவதும், சூரியக் கதிர்களின் தாக்கமும் முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றது.

இவற்றை போக்க அதிக செலவு செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. இயற்கை பொருட்களை வைத்து கூட சரி செய்ய முடியும்.

அதில் வெண்டைக்காய் பெரிதும் துணை புரிகின்றது. தற்போது இதனை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.   


தேவையான பொருள்கள்


  • வெண்டைக்காய் - 5
  • தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்
  • தண்ணீர் - ஒரு கப்

பயன்படுத்தும் முறை

வெண்டைக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். அதில் வெண்டைக்காயை சேர்த்து நன்கு 10 நிமிடங்கள் வரை கொதிக்க வேண்டும்.

பின் அடுப்பை அணைத்து விட்டு வெண்டைக்காயை ஆறவிட்டு மிக்சியில் சேர்த்து நன்கு அரைத்து இந்த கலவையுடன் தேங்காய் எண்ணெயை சேர்த்து நன்கு கலந்து பேஸ்பேக்காக அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.

பயன்கள்

  • சருமம் வறட்சியாக இருப்பவர்கள் இந்த பேஸ்பேக்கை பயன்படுத்தலாம்.

  • இது சருமத்தில் உள்ள பருக்கள் மற்றும் சுருக்கங்களைப் போக்கி நல்ல பொலிவையும் அழகையும் கொடுத்து இளமையாக வைத்திருக்கும்.   




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!