உங்கள் உதடு ரொம்ப வறண்டு போகுதா? இதனை தடுக்க அட்டகாசமான சில டிப்ஸ் இதோ உங்களுக்காக!!!
- Get link
- X
- Other Apps
பொதுவாக குளிர்காலம் வந்துவிட்டாலே உதடுகள் மிகவும் வறண்டு போய் பிளவுபட ஆரம்பித்து விடும்.
சில நேரங்களில் உதடுகள் சிவந்து போய் வலி கூட ஏற்படும்.
என்ன தான் உதட்டிற்காக நிறைய அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தினாலும் இதனை எளிதில் சரி செய்வது கடினம் தான்.
இதற்கு ஒரு வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்தே வறண்ட உதடுகளை சரி செய்ய முடியும். தற்போது அவை எப்படி என்பதை பார்ப்போம்.
* சர்க்கரையை எடுத்து, அதில் தேன் சேர்த்து கலந்து அதை உதடுகளில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்ததும், வெதுவெதுப்பான நீரால் உதடுகளை மென்மையாக தேய்த்துக் கழுவி வரலாம்.
* உங்கள் வீட்டில் ஸ்ட்ராபெர்ரி அல்லது கிவி இருந்தால், அதை மசித்துக் அதில் சில துளிகள் வைட்டமின் ஈ எண்ணெய் சேர்த்து கலந்து பின்பு அதில் சிறிது காபித் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பிறகு அந்த கலவையை இரவு தூங்கும் முன் உதடுகளில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரால் கழுவவும்.
* 1 டேபிள் ஸ்பூன் நாட்டுச் சர்க்கரை, 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 5-6 துளிகள் லாவெண்டர் எண்ணெய் சேர்த்து கலந்து அதை உதடுகளில் தடவி 2-3 நிமிடம் மென்மையாக ஸ்கரப் செய்த பின் உதடுகளை வெதுவெதுப்பான நீரால் கழுவிய பின், உதடுகளுக்கு லிப் பாம் பயன்படுத்த வேண்டும்.
* 2 டேபிள் ஸ்பூன் நாட்டு சர்க்கரை, 1 டேபிள் ஸ்பூன் கொக்கோ பவுடர், 1 டீஸ்பூன் வென்னிலா எசன்ஸ், 2 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் 3/4 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து பேஸ்ட் செய்து அதை உதடுகளில் தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்து, 5 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் உதடுகளை கழுவ வேண்டும்.
* பாதி கிவி, 1 ஸ்ட்ராபெர்ரி பழத்தை எடுத்து பிளெண்டரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் அதை ஒரு பௌலில் எடுத்துக் கொண்டு, அதில் 6 டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து பின்பு அதை உதடுகளில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, 1 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். வாரத்திற்கு 3-4 முறை போட்டு வரலாம்.
* 2 டீஸ்பூன் மசித்த அவகேடோ பழத்துடன் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து உதடுகளில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலம், உதட்டு வறட்சி நீங்கும்.
ALSO READ : படர் தாமரை ஏற்படுவதற்கான காரணங்கள்...
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment