நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சளியை சட்டுனு விரட்டனுமா? இந்த டீயை மறக்காமல் எடுத்துகோங்க!

 அடிக்கடி அனுபவிக்கும் ஒரு நோய் தான் சளித்தொல்லை. அந்த அளவில் சளி ஒருவருக்கு பிடித்துவிட்டால், அது பாடாய்படுத்திவிடும்.

ஆனால் நம்மில் பலர் சளி பிடித்தால், அதை சாதாரணமாக நினைத்து, தற்காலிகமாக ஏதேனும் மாத்திரையை எடுத்துக் கொண்டு விட்டுவிடுவோம்.

இருப்பினும் இது எளிதில் தீராது. இதற்கு ஒரு சூப்பரான டீ ஒன்று உள்ளது. அது எளிதில் எவ்வித பக்கவிளைவுகளுமின்றி சளியை போக்குகின்றது.

தற்போது இதனை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.


தேவையான பொருட்கள்

துளசி - 4 தளிர்
புதினா - 4 தளிர்
தண்ணீர் - 200 மில்லி
தேன் / நாட்டுச்சர்க்கரை / கருப்பட்டி - தேவையான அளவு

செய்முறை :

முதலில் துளசி, புதினா இரண்டையும் நன்கு கழுவி எடுத்துக் கொள்ளவும்.
பின்பு இரண்டையும் தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும்.
நன்கு சாறு இறங்கியதும் வடிகட்டி தேன் / நாட்டுச்சர்க்கரை / கருப்பட்டி கலந்து பருகலாம்.

குறிப்பு 

துளசி மற்றும் புதினாவை சம அளவு எடுத்து நிழலில் காய வைத்து பொடி செய்து வைத்துக் கொண்டால் தேவையான போது ஒரு டம்ளருக்கு 1/2 டீஸ்பூன் வீதம் போட்டு பருகலாம்.  




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்