நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சூப்பரான வெஜிடபிள் பாஸ்தா பிரியாணி....

 குழந்தைகளுக்கு பாஸ்தா மிகவும் பிடிக்கும். இன்று வெஜிடபிள் பாஸ்தா பிரியாணி செய்முறையை பார்க்கலாம்.


தேவையான பொருட்கள் :

 பென்னே பாஸ்தா - 200 கிராம் 

குடைமிளகாய் - 1

 கேரட், பீன்ஸ் - விருப்பத்திற்கேற்ப 

வெங்காயம் - 2

 தக்காளி - 2

கொத்தமல்லி - அரை கட்டு 

புதினா - அரை கட்டு 

தயிர் - 2 கப்

 உப்பு - தேவைக்கு 

மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன் 

கரம் மசாலா தூள் - 2 டீஸ்பூன்

 தனியா தூள் - 2 டீஸ்பூன்

 மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 

இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்.


தாளிக்க…

 எண்ணெய் - தேவையான அளவு

 வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

 சோம்பு - 2 டீஸ்பூன்

 பட்டை - 2 

கிராம்பு - 2

பிரிஞ்சி இலை - 2.


செய்முறை :

 குடைமிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

 கொத்தமல்லி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும். பாஸ்தாவை கொதிக்கும் நீரில் போட்டு அரை பாகம் வெந்தவுடன் ஒரு வடிதட்டில் கொட்டி குளிர்ந்த நீரில் அலசி ஒரு தட்டில் சிறிது எண்ணெய் ஊற்றி நன்றாக கலந்து வைக்கவும். 

அப்போது தான் பாஸ்தா ஒன்றுடன் ஒன்று ஒட்டாது. கடாயில் எண்ணெய், வெண்ணெய் ஊற்றி காய வைத்து முதலில் தாளிக்கக் கொடுத்த பொருட்களை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

 வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். 

வெங்காயம் நன்றாக வதங்கியதும் அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

 தக்காளி நன்றாக வதங்கிய பின்னர் காய்கறிகள், உப்பு, கொத்தமல்லி, புதினா, குடைமிளகாயை போட்டு வதக்கவும். 

அடுத்து மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் போட்டு வதக்கவும். 

காய்கள் வதங்கிய பின் தயாராக வைத்துள்ள தயிரைப் போட்டு மூடி வைக்கவும்.

 மசாலாப் பொருட்கள், காய்கறிகள் எல்லாம் சேர்ந்து வெந்து ஓரத்தில் எண்ணெய் பிரிந்து வரும் போது பாஸ்தாவைச் சேர்த்துக் கலந்த பின்னர் இறக்கி சுடச்சுட பரிமாறவும். 

இப்போது சூப்பரான வெஜிடபிள் பாஸ்தா பிரியாணி ரெடி. 

சிப்ஸ், தயிர் பச்சடியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.








Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்