நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சளிக்கு சூப்பர் மருந்து.. பாலிவுட் நடிகைகள் விரும்பும் கேரள கஞ்சி! செய்முறைக்கு சிம்பிள் டிப்ஸ்!

 தண்ணீர் காய்கறிகள், பழங்கள் என்று கூறுவதைப் போலவே இந்த கஞ்சியில் 80 – 90% தண்ணீர்தான் இருக்கிறது. எனவே இது உடலில் நீர்ச்சத்தை தக்க வைப்பதற்கு பெரிய அளவில் உதவியாக இருக்கிறது.


பொதுவாகவே சைவ உணவுகள் என்று வரும் பொழுது அவை அனைத்துமே ஊட்டச்சத்துக்களும் நிறைந்த உணவாக காணப்படும். பலவிதமான காய்கறிகள், கீரைகள், பருப்பு வகைகள், பழங்கள் என்று அனைத்து சுவை மற்றும் ஊட்டச்சத்துக்களும் நிறைந்த உணவாக காணப்படும். தலசேரி கேர்ல் என்று பிரபலமாக அறியப்படும் மரீனா பாலகிருஷ்ணன் என்ற பெண் சமீபத்தில் கேரள சைவ உணவைப் பற்றி பகிர்ந்திருந்தார். இந்தப் பதிவு இன்ஸ்டாகிராமில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்தப் பெண் பாலிவுட் நடிகைகளுக்கு, தனக்கு மிகவும் விருப்பமான, ஊட்டச்சத்து நிறைந்த, உடலுக்கு பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் கஞ்சியை அனுப்பியிருக்கிறார்!

கஞ்சியா? கஞ்சியில் என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம்! தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கஞ்சி என்பது சாதம் வடித்த கஞ்சி, சத்து மாவு, ராகி, ஆகியவற்றில் செய்யப்படும் ஒரு உணவாகும். ஆனால், கேரளாவை பொறுத்தவரை இது ஒரு முழு வெஜிடேரியன் மீல் என்று கூறப்படுகிறது. பாலிவுட் நடிகைகளான அனுஷ்கா ஷர்மா மற்றும் அதிதி ராவ் ஹைதரி இருவரும் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவு கஞ்சி என்று இருவருமே பகிர்ந்துள்ளனர். இந்த உணவு அப்படி என்ன ஸ்பெஷல் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.


கேரள கஞ்சி செய்வது எப்படி?

பெரும்பாலும் அரிசியில் செய்யப்படும் கஞ்சியைப் போலத்தான் அடிப்படையாக கேரள கஞ்சியை செய்ய வேண்டும். ஆனால் அரிசியில் இருக்கும் ஸ்டார்ச்சை நீக்குவதற்கு அரிசியை பலமுறை நீர்விட்டு அலச வேண்டும். கஞ்சி உங்களுக்கு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில், நீங்கள் தண்ணீர் விட்டு சாதம் வடித்து கொள்ளலாம். கெட்டியாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு ஏற்றார் தண்ணீர் கொஞ்சமாக சேர்த்தால் போதும். திரவமாக வேண்டும் என்றால், நிறைய தண்ணீர் வைத்து சாதம் வடித்துக் கொள்ளலாம். உப்பு சேர்த்தால் கஞ்சி ரெடி!

கஞ்சி இவ்வளவு தான். ஆனால், கேரள கஞ்சி என்பது ஒரு முழு உணவு. இந்த கஞ்சியை அப்படியே சாப்பிட மாட்டார்கள். இதற்கு பதார்த்தங்கள் ஆக துவையல், பயிறு, சுண்டல், பொறியல், பப்படம், பருப்பு வேக வைத்த காய்கறி ஆகியவை சேர்க்கலாம்.

கேரள கஞ்சி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் : 

செரிமானத்துக்கு நல்லது:

வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் இருக்கும் பொழுது இந்த கஞ்சியை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இது எளிதில் ஜீரணமாகும் மற்றும் செரிமான ஆற்றலை மேம்படுத்தும். அதிகமாக தண்ணீர் விட்டு கொழ கொழவென்று சாப்பிட்டால், செரிமான ஆரோக்கியம் மேம்படும்.


நீர்ச்சத்தை தக்க வைக்க உதவும் :

தண்ணீர் காய்கறிகள், பழங்கள் என்று கூறுவதைப் போலவே இந்த கஞ்சியில் 80 – 90% தண்ணீர்தான் இருக்கிறது. எனவே இது உடலில் நீர்ச்சத்தை தக்க வைப்பதற்கு பெரிய அளவில் உதவியாக இருக்கிறது. கஞ்சி செய்வதற்கு, ஒரு கப் அரிசிக்கு 10 கப் தண்ணீர் என்ற அளவில் சமைக்க வேண்டும். கொஞ்சம் திக்காக வேண்டுமென்றால் ஒரு கப் அரிசிக்கு ஏழு கப் தண்ணீர் என்ற அளவில் சமைக்கலாம். மட்ட அரிசி வேக நீண்ட நேரம் எடுத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் அதிக தண்ணீரையும் உறிஞ்சிக்கொள்ளும். எனவே இது உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்க உதவும் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாமல் பாதுகாக்கும்.

குறைவான கலோரி கொண்ட உணவு:

அதிக தண்ணீர், குறைவான கார்போஹைட்ரேட் கொண்ட அரிசி என்பதால், கஞ்சி குறைவான கலோரி கொண்ட உணவாகும். நீண்ட நேரத்துக்கு பசி எடுக்காது.

சளி மற்றும் காய்ச்சலுக்கு மருந்து: 

கஞ்சியில் இஞ்சி, சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைத்தால், சிறந்த கைவைத்தியம் தயார்.






Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!