நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ட்விட்டரில் பழையபடி விலையில்லா "புளூ டிக்" - ஆனால் ஒரு ட்விஸ்ட்!

 ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றியதில் இருந்து ஏராளமான மாற்றங்கள் தளத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. முன்னதாக உலக நாடுகளில் ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஏராளமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.


எலான் மஸ்க்-இன் சமூக வலைதளமான ட்விட்டர், சில வெரிபைடு அக்கவுண்ட்களுக்கு "Official" லேபல் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதில் முன்னணி செய்தி நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்கள் அடங்கும். இந்த வழிமுறை புதிய 8 டாலர்கள் சந்தா முறை அமலுக்கு வரும் போது பயன்பாட்டுக்கு வரும்.

 ட்விட்டரில் எட்டு டாலர்கள் சந்தா முறையை செயல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ட்விட்டர் நிறுவனத்தின் பிராடக்ட் பிரிவு அதிகாரி எஸ்தர் கிராஃபோர்டு ட்விட்டர் புளூ சந்தா முறையில் ஏராளமான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

 அதன்படி புதிய ட்விட்டர் புளூ சந்தா முறை பயனர்களுக்கு வெரிபைடு புளூ டிக் வழங்கும். இவ்வாறு வழங்கும் போது எந்த விதமான சோதனையும் மேற்கொள்ளப்படாது.

 இந்த வழிமுறைக்கு பலரும் எதிர்ப்பு மற்றும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக வெரிபை செய்யப்பட்டு புளூ டிக் பெற்று இருக்கும் அக்கவுண்ட்களுக்கு புதிய "Official" லேபெல் வழங்கப்படாது. 

எனினும், இதனை பணம் கொடுத்து வாங்கிட முடியாது. இந்த லேபெல் முதன்மையாக அரசாங்கங்கள், வர்த்தக நிறுவனங்கள், வியாபாரங்கள், முன்னணி செய்தி நிறுவனங்கள் மற்றும் சில பொது நபர்களுக்கு மட்டும் பிரத்யேகமாக வழங்கப்பட இருக்கிறது.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்