ஓஜஸை சீராக வைப்பதற்கும், சரும பொலிவிற்கும், கூந்தல் வளரவும், உறக்கத்தை மேம்படுத்தவும் பெரிதும் பயன்தரும் உணவே இந்த ஓஜஸ் ட்ரிங்க். இந்த ஓஜஸ் ட்ரிங்கிற்கு பல விதமான ரெசிபிகள் உள்ளன.
ஓஜஸ் என்பதற்கு சக்தி அல்லது வலிமை என்று பொருள். ஆயுர்வேதத்தின் படி ஒருவரின் உடலில் 3 சக்திகள் இயங்கும். அவை, ஓஜஸ், தேஜாஸ் மற்றும் ப்ரானா . இதில் ஓஜஸ் என்பது நம் உடல் வலிமை , எதிர்ப்பு சக்தி ,மன வலிமை ஆகியவைகளை குறிக்கும்.
ஓஜஸ் சரியாக இருந்தால் தான் நம் மனம், உடல், ஆன்மா ஆகியவை இணைந்து சீராக செயல்படும். அதிகமான சர்க்கரை நிறைந்த உணவுகள், மது, பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவை இந்த ஓஜஸை குறைத்துவிடும்.
ஓஜஸை சீராக வைப்பதற்கும், சரும பொலிவிற்கும், கூந்தல் வளரவும், உறக்கத்தை மேம்படுத்தவும் பெரிதும் பயன்தரும் உணவே இந்த ஓஜஸ் ட்ரிங்க். இந்த ஓஜஸ் ட்ரிங்கிற்கு பல விதமான ரெசிபிகள் உள்ளன. அதில் சரும பொலிவு மற்றும் கூந்தல் வளர்ச்சிக்கு பெரிதும் பயன்படும் வகையான ரெசிபியை பார்க்கலாம் .
தேவையான பொருட்கள்
8-10 பாதாம்
5 பிஸ்தா
2 வால்நட்
3 டேட்ஸ்
1 டேபிள்ஸ்பூன் உளர் திராட்சை
1 டேபிள்ஸ்பூன் பூசணி விதைகள்
4-5 குங்குமப்பூ
1டேபிள்ஸ்பூன் ரோஜா இதழ்கள்
¾ டீஸ்பூன் மஞ்சள் தூள்
செய்முறை
2 கிண்ணங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் ஒரு கிண்ணத்தில் பாதாம், வால்நட், பிஸ்தா அகியவற்றைத் தேவையான அளவு தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். மற்றொரு கிண்ணத்தில் டேட்ஸ், உலர்திராட்சை, பூசணிவிதைகள் குங்குமப்பூ, மஞ்சள்தூள் ஆகியவற்றை சரியாக மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஊறவைக்க வேண்டும்.
இதை இரவில் செய்துவிட வேண்டும். காலை ஊறவைத்த பாதாம் மற்றும் பிஸ்தாவின் தோலை அகற்றி அதனை ஊறவைத்த தண்ணீரையும் நீக்கிவிட வேண்டும். ஒரு மிக்ஸியில் இந்த பாதாம், பிஸ்தா, வால்நட் மற்றும் இன்னொரு கிண்ணத்தில் ஊறவைத்திருக்கும் பொருட்களை ஊற வைத்த தண்ணீருடன் சேர்க்க வேண்டும். ரோஜா இதழ்கள் இருந்தால் அதையும் சேர்த்துக்கொள்ளலாம். இவற்றையெல்லாம் 1/2 கப் பால் அல்லது தண்ணீருடன் சேர்த்து அரைத்து எடுத்துகொள்ளவும். இதனை காலை வெறும் வயிற்றில் உட்கொள்ளவது அதிக பலன்களை தரும். இதை தொடர்ந்து சாப்பிடும்போது உடல் சோர்வெல்லாம் நீங்கி உடல் மினுமினுப்பதை நீங்களே பார்ப்பீர்கள்.
Comments
Post a Comment