உங்க போனில் ஆடியோ ரொம்ப கம்மியா இருக்கின்றதா? இதை செய்யுங்க போதும்....
- Get link
- X
- Other Apps
நாம் வாங்கியிருக்கும் புதிய போனில் சில தினங்களுக்குள் சவுண்டு குறைவாக கேட்க ஆரம்பித்துவிடும். இதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் பலரும் கவலை பட்டுக்கொண்டிருப்பார்கள்.
சிலர் தனது ஆண்ட்ராய்டு போன் சவுண்ட் பிரச்சினையை சரிசெய்வதற்கு சில ஆப்களை பதிவிறக்கம் செய்து முயற்சி செய்வார்கள். ஆனால் இவ்வாறு செய்யாமல் சில முறைகளை மட்டும் நான் கடைபிடித்தாலே போதுமாம்.
இணையம் வழியாக தீர்வு
உங்கள் போனில் கூகுள் குரோமிற்கு சென்று Fix my speaker என டைப் செய்ததும், https://fixmyspeakers.com/ என்ற லிங்கை க்ளிக் செய்யவும்.
ஆனால் உங்கள் போனில் சவுண்டை முழுவதுமாக வைத்துக் கொள்ள வேண்டுமாம். பிறகு நீர்த்துளி போன்ற பொத்தானை க்ளிக் செய்யவும்.
பின்பு உங்களது போனில் சவுண்டை மெதுவாக கூட்டியும், குறைக்கவும் செய்யுங்கள்... மேலும் இந்த fixmy speacker -ல் இருந்து வரக்கூடிய சத்தமானது ஒருவிதமாக வைப்ரேஷனை ஏற்படுத்துவதால், உங்களது மொபைல மெதுவாக தட்டினாலே போன் ஸ்பீக்கரில் அடைத்திருக்கும் தூசிகள் முழுவதும் வெளியேற்றி விடுமாம்.
பின்பு போனில் சத்தம் தொடர்பான பிரச்சினை உங்களுக்கு இருக்கவே இருக்காதாம்.
போனில் செட்டிங்ஸ் வழியாக தீர்வு
உங்கள் மொபைலில் செட்டிங் ஆப்ஷனுக்கு சென்று Sound and Vibration என்பதை தெரிவு செய்யவும்.
பின்பு Sound Quality and effect என்பதை க்ளிக் செய்யவும். அனைத்து போன்களில் இந்த இரண்டு அம்சங்கள் இருக்குமாம். சிலருக்கு இவை செயலில் இருக்கும்... சிலருக்கு செயலில் இருக்காதாம்.
இதனை செயல்பட வைப்பதற்கு உங்களது போனில் ஹெட் செட்டை சொருகிய பின்பு Dolby Atmos என்பதை ஆன் செய்யவும்.
நீங்கள் போனில் பேச வேண்டும் என்றால் Voice என்பதையும், விருப்பமான பாடல் கேட்க வேண்டும் என்றால் Music என்பதையும் தெரிவு செய்ய வேண்டுமாம்.
இதுமட்டுமின்றி உங்களது போனில் Dialer உள்ள செட்டிங்ஸ் பகுதியில் இருக்கும் Other call Settings என்பதை க்ளிக் செய்யவும்.
இவ்வாறு கிளிக் செய்துவிட்டு, Hearing and compatability என்பதை ஆன் செய்து வைத்துக் கொண்டால் போதுமாம். நாம் மற்றவர்களிடம் பேசும் போது தெளிவான ஆடியோ நமக்கு கிடைக்குமாம்.
ALSO READ : பணம் கொடுத்தால் ட்விட்டர் புளூ டிக் - விலை எவ்வளவு தெரியுமா?
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment