நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஷூ லேஸ் காதணிகளை அறிமுகப்படுத்திய பிரபல நிறுவனம் - என்ன விலை தெரியுமா?

 Balenciaga எனும் முன்னணி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ஷூலேஸ் காதணிகள் மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.


பெரும்பாலானோர் ஃபேஷன் விரும்பிகளாக இருப்பார்கள், அதிலும் சிலர் வாழ்க்கையையே பேஷன் நோக்கி நகர்த்த வேண்டும் என்று நினைப்பார்கள்.

அதற்காக சுற்றியுள்ள அனைத்தையும் அவ்வாறு மாற்ற முன்வருவார்கள். இவர்களின் மன நிலையை புரிந்துகொள்ளும் பல ஃபேஷன் நிறுவனங்கள் அவர்களுக்காகவே பிரத்யேகமாக பல பொருட்களை தயாரித்து வருகிறது.

ஃபேஷனுக்காக உங்கள் வழக்கமான ஷூலேஸ்களை காதணிகளாக அணிவது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஃபேஷன் பிராண்டான Balenciaga எனும் முன்னணி நிறுவனம் ஷூலேஸ் காதணிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.


இந்த வகையான காதணிகள் இணையத்தில் மூலம் மக்களை ஈர்த்துள்ளன. ஃபேஷன் பிராண்ட் ஷூலேஸ் காதணிகளின் விலை 250 அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 20,000 ரூபாய் என்று கூறப்படுகிறது.

Highsnobiety என்ற குளோபல் பேஷன் மீடியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த புதிய வகை காதணிகளின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது. இதனை கண்ட இணையவாசிகள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஷனுக்காக Balenciaga வித்தியாசமான, விலை உயர்ந்த பொருட்களைதயாரிப்பது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்பு 1790 டாலர்களுக்கு Trash Pouch எனப்படும் குப்பை பை ஒன்றை இந்த நிறுவனம் உருவாக்கியதும் குறிப்பிடத்தக்கது.



ALSO READ : உலகின் அதிவேகமான ஷூ! நடை வேகத்தை 250% அதிகரிக்கும் காலணிகள் - விலை என்ன தெரியுமா?


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!