நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஹோட்டல்களில் கிடைக்கும் அதே சுவையுடன் வீட்டிலேயே குஸ்கா பிரியாணி செய்வது எப்படி?

 இந்த குஸ்கா பிரியாணி மிகச்சிறந்த ஒரு மாற்றாக அமையும். ஏனெனில் நாம் செய்த குஸ்கா பிரியாணி, இறைச்சி சேர்த்து செய்தால் எந்த சுவையில் இருக்குமோ கிட்டத்தட்ட அதே போன்று சுவையை கொடுக்கும்.


பிரியாணி அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஓர் உணவு. சைவம், அசைவம் என்று வேறுபாடு இல்லாமல் அனைத்து தரப்பினருக்கும் பிரியாணியின் மீது ஒரு தனி ஈடுபாடு உண்டு. சைவ பிரியர்கள் இறைச்சிக்கு பதிலாக காய்கறிகளை சேர்த்து பிரியாணியை சமைத்து சுவைத்து மகிழ்கின்றனர். மற்ற மாநிலங்களை விட தென்னிந்திய மக்களுக்கு பிரியாணி என்றால் கொள்ளை பிரியம். அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப விதவிதமான பிரியாணி வகைகள் செய்யப்படுகின்றன.

ஆனால் நாம் என்னதான் முயற்சி செய்தாலும் வீடுகளில் செய்யப்படும் பிரியானியானது கடைகளில் கிடைக்கும் பிரியாணியைவிட எப்போதும் சுவை குறைவாகவே இருக்கும். எனவே வீட்டிலேயே குஸ்கா பிரியாணி எப்படி செய்வது என்று இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம். இதை சரியாக செய்தீர்கள் என்றால் ஹோட்டல்களில் கிடைப்பதை விட சுவையும் தரமும் அதிகமாகவே இருக்கும்.


செய்முறை:

பிரியாணி செய்யப்போகும் அரிசியை நீரில் சிறிது நேரம் ஊற வைத்து, அதன் பின் கொதிக்க வைக்கவேண்டும். அதன் பிறகு அதில் உள்ள நீரை வடித்து விட்டு அரிசியை பாத்திரத்தோடு சேர்த்து தனியாக வைத்து விட வேண்டும்.

இப்போது குஸ்கா பிரியாணி செய்வதற்கு தேவையான மசாலாக்களை தயார் செய்ய வேண்டும். நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை நெய்யுடன் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

பழுப்பு நிறத்தில் வரும் வரை வதக்கிய பிறகு, நறுக்கிய தக்காளி மற்றும் உப்பு, மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் ஆகிய மசாலாக்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் . தக்காளி நன்றாக வதங்கிய பிறகு அதனுடன் தேவையான அளவு தயிரை சேர்த்து இன்னும் நன்றாக கலக்க வேண்டும். அதன் பின்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

இவை அனைத்தும் சரியாக செய்து முடித்த பின் ஏற்கனவே எடுத்து வைத்த அரிசியை இந்த மசாலாக்கள் அடங்கிய கலவையுடன் சேர்த்து இன்னும் சிறிது நேரம் சமைக்க வேண்டும். சரியான பதத்துடன் வந்ததும் நாம் பாத்திரத்தை இறக்கி விடலாம்.

இப்போது சுவையான தரமான தென்னிந்திய குஸ்கா பிரியாணி தயார். நீங்கள் விரும்பினால் இதனோடு உங்களுக்கு பிடித்த வெங்காய பச்சடி அல்லது வேறேதேனும் கிரேவி வகைகளுடன் சேர்த்து பரிமாறினால் சுவை என்னும் கூடுதலாக இருக்கும்.

இப்படி பிரியாணி செய்வதில் பல நன்மைகள் உள்ளன. பிரியாணி சாப்பிட ஆர்வமாக உள்ள சைவர்களுக்கு, இந்த குஸ்கா பிரியாணி மிகச்சிறந்த ஒரு மாற்றாக அமையும். ஏனெனில் நாம் செய்த குஸ்கா பிரியாணி, இறைச்சி சேர்த்து செய்தால் எந்த சுவையில் இருக்குமோ கிட்டத்தட்ட அதே போன்று சுவையை கொடுக்கும். மேலும் அவசர நேரத்தில், மிக நீண்ட நேரம் சமையல் அறையில் செலவழித்து உணவை சமைக்க விரும்பாதவர்கள் இந்த முறையில் பிரியாணி செய்து நேரத்தை சேமிப்பதுடன், சுவையான பிரியாணி செய்ததற்காக நற்பெயரையும் பெற முடியும்.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்