திருமணம் என்றால் என்ன? வைரலாகும் மாணவரின் பதில்
- Get link
- X
- Other Apps
பெரியவர்களுக்கே திருமணம் பற்றிய புரிதல் இல்லை என கூற்றுகள் இருந்துவரும் நிலையில், பள்ளி மாணவர் ஒருவரின் திருமணம் பற்றிய புரிதல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருமணம் என்றால் என்ன எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு பள்ளி மாணவர் ஒருவர் அளித்துள்ள பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருமணம் என்பது பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு செய்யும் கடமை என்ற எண்ணம் இன்றும் நம் ஊர்களில் இருக்கிறது. கட்டாயத் திருமணங்கள் ஒரு புறம் என்றால், நம்மை எமோஷனலாக பிளாக்மெயில் செய்து கல்யாணம் செய்து வைக்கும் பழக்கமும் மறுபுறம்.
இருவர் இணைந்து வாழப்போகும் நாட்கள், புரிதலோடும் காதலோடும் இருக்கவேண்டும் என இந்த தலைமுறை நிறைய கட்டமைப்புகளை உடைத்து வருகிறது.
பெரியவர்களுக்கே திருமணம் பற்றிய புரிதல் இல்லை என கூற்றுகள் இருந்துவரும் நிலையில், பள்ளி மாணவர் ஒருவரின் திருமணம் பற்றிய புரிதல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வகுப்பில் நடத்தப்பட்ட டெஸ்ட் ஒன்றில், திருமணம் என்றால் என்ன என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அது 10 மதிப்பெண்களுக்கான வினா விடை தேர்வு. அந்த கேள்விக்கு ஒரு மாணவர் பதில் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது,
"திருமணம் என்பது, பெண்ணின் பெற்றோர் அவளிடம் 'நீ இப்போது வளர்ந்து பெரியவளாகி விட்டாய். எங்களால் இனி உன்னை கவனித்துக்கொள்ளவோ, உனக்கு சாப்பாடு போடவோ முடியாது. நீ சென்று உன்னை பார்த்துக்கொள்ளும் உனக்கு சாப்பாடு போடும் ஒரு ஆணை தேடிக்கொள்' " என எழுதியிருந்தார்.
மேலும், "அதன் பிறகு அந்த பெண் தனக்கான ஆணை தேர்ந்தெடுப்பார்" எனக் கூறி, "அவள் தேர்ந்தெடுக்கும் ஆணிடம் அவனது பெற்றோர் திருமணம் செய்துகொள்ள சொல்லி அவனை திட்டுவார்கள். ப்ளீஸ், நீ இப்போது பெரியவனாகிவிட்டாய் என சொல்லுவார்கள்.
இந்த ஆணும், பெண்ணும், ஒருவரை ஒருவர் சோதித்துக் கொண்ட பின்னர் திருமணம் செய்துகொள்வார்கள். பின்னர் குழந்தை பெற்றுக்கொள்வார்கள்" என்று விளக்கமளித்திருந்தார்.
இந்த பதிலை படித்த ஆசிரியர் கோபமடைந்து,அந்த விடையை தவறு எனக் கூறி, 10 க்கு 0 மதிப்பெண் கொடுத்திருந்தார். மேலும் nonsense என்ற கமென்ட்டையும் அந்த விடைத்தாளில் எழுதியிருந்தார்.
இந்த விடைத்தாளின் புகைப்படத்தை வேலு என்ற நபர் தன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். ஆசிரியருக்கு அந்த பதிலை பார்த்து கோபம் வந்திருக்கலாம்.
ஆனால், இணையவாசிகளோ, மாணவரின் புரிதலை பாராட்டி வருகின்றனர். பலரும், பெரியவர்களை விட அந்த மாணவருக்கு புரிதல் நன்றாகவே இருக்கிறது. அந்த விடைக்கு 10க்கு 10 மதிப்பெண்கள் வழங்கவேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.
ALSO READ : மரணமே இல்லாத உயிர்கள் 2: சிரஞ்சீவி 'ஹைட்ரா' - வெட்டிப் போட்டாலும் வளரும் உயிரினம்!
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment