நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

மரணமே இல்லாத உயிர்கள் 2: சிரஞ்சீவி 'ஹைட்ரா' - வெட்டிப் போட்டாலும் வளரும் உயிரினம்!

 FoxO genes என்ற ஜீன்கள் தான் ஹைட்ரா இளமையாகவே இருக்க காரணம். இந்த ஜீன்கள் புழுக்கள் முதல் மனிதர்கள் வரை அனைத்து உயிர்களிலும் இருக்கின்றன.


மரணமே இல்லாத உயிர்களைப் பார்த்து வருகிறோம். மரணம் நம் வாழ்வில் என்றோ ஒரு நாள் நடக்கப் போகும் நிகழ்வு தான் என்று நம்மால் இருந்துவிட முடியாது. நம் ஒவ்வொரு நடவடிக்கையும் அந்த மரணத்தை நோக்கியது தான். எப்படி டெட்லைன் இல்லாத அலுவலகத்தில் எந்த வேலையும் நடப்பது இல்லையோ அப்படி மரணம் இல்லாத வாழ்வு ஒன்றும் இல்லாததாக இருக்கும். ஆனாலும் வாழ்க்கையை அர்த்தமாகும் மரணம் இல்லாமல் இருக்க வேண்டும் என்று தானே நம்மில் பலரும் ஆசைப் பட்டிருக்கிறோம்! ஆசையின் படி இந்த மரணமற்ற உயிர்களின் மீது பொறாமை எழுந்திருந்தால் அது தேவையற்றது. ஏன் என இந்த உயிரினத்தைப் பார்த்ததும் அறிந்து கொள்வீர்கள்.

ஹைட்ரா - hydra

ஜெல்லி மீனின் வாழ்க்கை சுழற்சியில் வரும் polyp-களைப் போல காணப்படும் உயிரினம் தான் இந்த ஹைட்ரா. இதற்கு டியூப் போன்ற உடல் உள்ளது. பல கூடாரம் போன்ற வளையமான வாயும் பிசுபிசுப்பான காலும் இருக்கிறது.

நன்னீர் இருக்கும் குளம் அல்லது ஆறுகளில் வசிக்கும் இவை மிக எளிதான வாழ்க்கையை வாழ்கின்றன. ஒரே இடத்தில் நிலையாக இருந்து தனது கொட்டும் நீட்சிகள் மூலம் இரையை பிடிக்க முயற்சி செய்கின்றன.

1990களில் டேனியல் மார்டினஸ் என்பவர் ஹைட்ராக்களை கண்டறிந்தார்.



                                                      டேனியல் மார்டினஸ்

ஹைட்ராக்கள் முதிர்ச்சி அடைவதே இல்லை. அவற்றின் செல்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் தன்னை புதுப்பித்துக்கொள்ளும் தன்மை கொண்டவை.  FoxO genes என்ற ஜீன்கள் தான் இவை இளமையாகவே இருக்க காரணம். இந்த ஜீன்கள் புழுக்கள் முதல் மனிதர்கள் வரை அனைத்து உயிர்களிலும் இருக்கின்றன.

ஹைட்ராவின் ஸ்டெம் செல்களில்  FoxO genes அதிகமாக வெளிப்படுவதால் அவை மரணிப்பதில்லை. இந்த ஜீன்களை நீக்கினால் ஹைட்ராக்கள் முதிர்வடையும் என்பது சோதனை மூலம் நிறுபிக்கப்பட்டிருக்கிறது.

ஆனாலும் எப்படி இளமையாக இருக்கிறது என்பதை அறிவியலாளர்கள் சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை.  FoxO genes முக்கிய பங்கு ஆற்றுவது மட்டும் உறுதி.

இந்த சிரஞ்சீவிகளை கண்டு நாம் பொறாமை கொள்ள தேவையில்லை. ஏனெனில் ஹைட்ராகளுக்கு மூளை போன்ற உள்ளுறுப்புகள் கிடையாது. ஒரே நிலையான இடத்தில் வாழ்க்கை. யாராவது வெட்டிப் போட்டால் கூட திரும்ப வந்துவிடலாம் (ஹைட்ரோ செல்கள் மீண்டும் உறுப்புகளை உருவாக்க வல்லது). வாயில் வந்து விழும் உணவுகள். சுற்று சூழலே கொன்றால் மட்டுமே இறப்பு!





Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!