இனி சென்னையை சுற்றி வரும் கில்லி சாய்: ஆட்டோக்களில் வரும் Tea and Snacks!!
- Get link
- X
- Other Apps
தமிழக அரசின் "மாசு இல்லாத தமிழ்நாடு" திட்டமும், மின்சார வாகனங்களுக்கு வழங்கப்படும் வரி விலக்குகளும் இந்த புதுமையான வணிக மாதிரியை உண்மையில் செயலாக்குவதற்கு கில்லி சாயை ஊக்குவித்துள்ளன.
சென்னை: சென்னையின் ‘கில்லி சாயின்’ புதிய முயற்சியானது, தனது மொபைல் விற்பனை நிலையங்கள் மூலம், கோடம்பாக்கம், டி நகர், வடபழனி மற்றும் சாலிகிராமம் ஆகிய இடங்களிலும் மக்களுக்கு உதவ வருகிறது. புதிய வாடிக்கையாளர்கள் கில்லி சாயை இனி ருசித்துப் பார்ப்பார்கள்.
பெண்களால் இயக்கப்படும் தனியார் ஆட்டோரிக்ஷா சேவை வழங்குநரான MAuto-வின் மின்சார வாகனங்கள் சென்னை (Chennai) நகரத்தின் சில பகுதிகளைச் சுற்றி, சுலைமானி சாய் முதல் சாக்லேட் சிப் குக்கீகள் வரை அனைத்தையும் மக்களுக்கு வழங்கும்.
“பஸ் நிறுத்தத்தில் காத்திருக்கும் பல பயணிகளுக்கு சில சமயம் ஏதாவது உண்ணும் எண்ணம் வந்தாலும், அவர்கள் அருகில் உள்ள கடைகளுக்கு சென்று குக்கீகள் அல்லது மெது வடை போன்றவற்றை வாங்கி உண்ணவோ அல்லது ஒரு டீ குடிக்கவோ கூட நேரம் இருக்காது. அவர்களைப் பொறுத்தவரை, இப்படிப்பட்ட சேவை மிகவும் உதவியாக இருக்கும். மேலும், வீட்டில் தங்கி இருக்கும் மூத்த குடிமக்கள், அவர்கள் வீட்டு வழியாக நாங்கள் செல்லும்போது, எங்களிடம் இவற்றை வாங்கி உட்கொண்டால் அது அவர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை அளிக்கும்.” என்று பெண் ஆட்டோ ஓட்டுனர்களில் ஒருவர் தெரிவித்தார்.
இந்த மொபைல் விற்பனை நிறுவனங்களின் நோக்கம் பயணிகளுக்கு தரமான உணவை வழங்குவதாகும். இந்த வாகனங்கள் முன் வரையறுக்கப்பட்ட பாதைகளை எடுத்து முன் வரையறுக்கப்பட்ட இடங்களில் நிறுத்தப்படும். சைதாபேட்டை மெட்ரோ ரயில் (Metro Train) நிலையத்திலும் பயணிகளுக்காக ஒரு புதிய கடை திறக்கப்பட்டுள்ளது.
இது தவிர, தமிழக அரசின் (Tamil Nadu Government) "மாசு இல்லாத தமிழ்நாடு" திட்டமும், மின்சார வாகனங்களுக்கு வழங்கப்படும் வரி விலக்குகளும் இந்த புதுமையான வணிக மாதிரியை உண்மையில் செயலாக்குவதற்கு கில்லி சாயை ஊக்குவித்துள்ளன.
ALSO READ : கொத்தமல்லி சட்னி வாசனைக்கே அத்தனை தோசை சாப்பிடலாம்!
சென்னை வீதிகளில் ஏராளமான கடைகளைக் கொண்டுள்ள கில்லி சாய் இப்போது அடுத்த கட்டத்தில் அடி எடுத்து வைக்கிறது. பூஜ்ஜிய-உமிழ்வு வாகனங்கள் மொபைல் தேநீர் விற்பனை நிலையங்களாக மாற்றப்படுகின்றன. இந்த ஆட்டோக்கள் தெருக்களில் சூடான சாய் மற்றும் பிற சிற்றுண்டிகளை வழங்குகின்றன. இவர்களது குழுவில் பெரும்பாலானவர்கள் பெண்களாகவே உள்ளனர். ஆட்டோ ரிக்ஷாக்கள் இனி சூடான டீ மற்றும் சிற்றுண்டிகளை உங்களுக்கு உங்கள் பயணத்தின் நடுவில் கொண்டு வந்து கொடுக்கும்.
இந்த சாய் ஆட்டோக்கள் (Autorickshaw) பல்வேறு கட்டங்களில் பெண்களால் முழுமையாக நிர்வகிக்கப்பட்டு இயக்கப்படும். முதல் சாய் ஆட்டோவை 33 வயதான மோகன சுந்தரி இயக்குகிறார். அவர் கடந்த சில ஆண்டுகளாக ஆட்டோரிக்ஷா டிரைவராக இருந்தாகவும் அவர் தெரிவிக்கிறார்.
கில்லி சாய் நிறுவனம் மூன்று வழக்கமான கடைகளை அறிமுகப்படுத்தப் போவதாகவும், அவை சாய் ஆடோக்கள் தேநீரையும் மற்ற உணவு வகைகளையும் தங்கள் வாகனங்களில் நிரப்பும் நிலையங்களாகவும் செயல்படும் எனவும் கில்லி சாயில் பணிபுரியும் ஒருவர் தெரிவித்தார்.
ALSO READ: சீனாவில் ஆண்டுதோறும் 35 பி. கிலோ உணவு வீண்
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment