நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உயிருடன் இருந்த விஷப் பாம்பை அப்படியே சுவைத்து உண்ணும் தவளை... இணையத்தில் வைரலாகும் வியப்பூட்டும் வீடியோ

 


இணையத்தில் பச்சை தவளைகள் முழு பாம்பை அப்படியே உண்ணும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றது. பலரும் தவளையின் வயிறு அவ்வளவு பெரியதா? என ஆச்சர்யத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் பச்சை நிறத் தவளை ஒன்று அப்படியே பாம்பினை சுவைத்து உண்ணும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. தவளை, எலி போன்றவற்றை பாம்புகள் உணவாக உட்கொள்வது வழக்கம். இதனைத் தான் உணவு சங்கிலி முறையில் சிறு வயதில் இருந்து பலரும் படித்திருப்பார். பார்த்திருப்பார்.

ஆனால் இதற்கு மாற்றாக பச்சை தவளை ஒன்று, முழு பாம்பினை அப்படியே சுவைத்து உண்ணும் செயல் இணையவாசிகளிடையே வைரலாகி வருகின்றது. இதற்கு முன்னதாக இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் தவளை ஒன்று முழு பாம்பையும் அப்படியே விழுங்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் காடுகளில் உணவு சங்கிலி முறையில் இவை எல்லாம் சாத்தியம் என கேப்சனோடு வெளியிடிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலரையும் ஆச்சர்யத்தில் உறையவைத்தது. பாம்பை உண்ணும் அளவிற்கு தவளையின் வயிறு பெரிதா என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்