நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

23 கேரட் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட பிரியாணி.... விலை ஒரு பிளேட் ரூ. 20,000

துபாயில் தங்கம் கலந்த ஒரு பிளேட் பிரியாணியின் விலை ரூ. 20 , 000 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதான், உலகிலேயே விலையுயர்ந்த பிரியாணியாக கருதப்படுகிறது. 
இந்தியா போலவே வளைகுடா நாடுகளிலும் பிரியாணியும் விரும்பி உண்ணப்படுகிறது. குறிப்பாக , துபாயில் விதவிதமாக பிரியாணி தயாரித்து சாப்பிடுகிறார்கள். ஏராளமான பிரியாணி ரெஸ்டாரன்டுகளும் துபாய் முழுவதும் நிறைந்துள்ளன. இந்திய தயாரிப்பு பிரியாணியும் துபாயில் விரும்பி உண்ணப்படுகிறது. அந்த வகையில், துபாயில் செயல்பட்டு வரும் பாம்பே போரோ என்ற பிரியாணி ரெஸ்டாரன்ட்டில் ராயல் பிரியாணி என்ற பெயரில் உலகிலேயே அதிக விலை கொண்ட பிரியாணி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிரியாணியில் 23 கேரட் சாப்பிடக் கூடிய தங்கமும் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரு பிளேட் அலங்கரிக்கப்பட்ட பிரியாணியின் விலை ரூ.20,000 ஆகும். கிட்டத்தட்ட 6 பேர் ஒரு பிளேட் பிரியாணியை உண்ண முடியும்.

பாம்பே போரோ ரெஸ்டாரன்ட் துபாயில் தொடங்கப்பட்டு முதல் ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு இந்த ராயல் பிரியாணி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிரியாணியுடன் காஷ்மீர் ஆட்டு கபாப், பழைய டெல்லி ஆட்டுக்கறி, ராஜ்புத் சிக்கன் கபாப், மொகாலி கோப்தாஸ், மற்றும் மலாய் சிக்கன் ஆகியவையும் வழங்கப்படும். பிரியாணியில் சாப்பிடக் கூடிய தங்கம் அலங்கரிக்கப்பட்டிருக்கும். வெறும், 45 நிமிடங்ளில் இந்த பிரியாணியை தயாரித்து வழங்குகிறார்கள்.


Comments

Popular posts from this blog

பசிச்சா எடுத்துக்குங்க...' - 20 ரூபாய் பிரியாணி; காசு இல்லைன்னா FREE பிரியாணி!

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...