நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கோடிகளுக்கு அதிபதி: இப்போது லாட்டரியில் ரூ. 30 கோடி; நடிகர் ஆர்யாவின் சகோதரிக்கு அடித்த அதிர்ஷ்டம்!

நடிகர் ஆர்யாவின் சகோதரிக்கு துபாய் டூட்டி ஃப்ரீ லாட்டரியில் ரூ. 32 கோடி பரிசாக விழுந்துள்ளது.
அமீரகத்தில் விற்கப்படும் டூட்டி ஃப்ரீ லாட்டரிகள் வெகு பிரபலம். இந்த லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கினால் கிடைக்கும் பரிசுகளுக்கு வரி விதிக்கப்படாது. எனவே, நடைமுறை செலவுகள் போக, மீதியுள்ள தொகை அப்படியே பரிசு வெல்பவர்களுக்கு கிடைக்கும். வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இந்த ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். அந்த வகையில், கடந்த ஜனவரி 26 - ஆம் தேதி நடிகர் ஆர்யாவின் சகோதரி தஸ்லீனா, லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார்.

இதில் முதல் பரிசான 15 மில்லியன் திர்காம்ஸ் அதாவது இந்திய மதிப்பில் ரூ.32 கோடியை பரிசாக வென்றுள்ளார். இரண்டாவது , மற்றும் மூன்றாவது பரிசும் இந்த முறை இந்தியர்களுக்கே கிடைத்துள்ளன. இரண்டாவது பரிசை வென்ற பிரேம் என்பவர் கடந்த 26 - ஆம் தேதி வேலை இழந்துள்ளார். ஏதோ ஒரு நினைப்பில் லாட்டரி டிக்கெட்டை அதே தினத்தில் வாங்கியுள்ளார். அவர் வாங்கிய லாட்டரிக்கு கிட்டத்ட்ட ரூ. 6.69 கோடி பரிசாக விழுந்துள்ளது.

தற்போது, தோஹாவில் வாழ்ந்து வரும் தஸ்லீனா கத்தார் மற்றும் இந்தியாவில் இயங்கி வரும் எம்.ஆர்.ஏ ரெஸ்டாரன்ட் அதிபர் கடாஃபியின் மனைவி ஆவார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கோழிக்கோடு, தலச்சேரி, வடகரா உள்ளிட்ட பல இடங்களில் எம்.ஆர்.ஏ ரெஸ்டாரன்ட் இயங்கி வருகிறது. கேரளாவில் காசர்கோடு மாவட்டத்திலுள்ள திரிகரிப்பூர் என்ற பகுதியை சேர்ந்தவர்கள் ஆர்யாவும் தஸ்லீமாவும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்