நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உறைந்த ஆற்றுக்குள் சிக்கிக் கொண்ட தம்பதி; ராட்சத கிரேன் உதவியுடன் மீட்ட தீயணைப்புத்துறை.

அமெரிக்காவின் கனெக்டிக்கட் பகுதியில் உறைந்த ஆற்றுக்குள் சிக்கிய தம்பதியை தீயணைப்பு துறையினர் ராட்சத கிரேன் மூலம் பத்திரமாக மீட்டனர்.
கடும் பனிப்பொழிவு மற்றும் குளிர் கால புயல் காரணமாக அமெரிக்காவில் நீர்நிலைகள் உறைந்து காணப்படுகின்றன.

இந்த நிலையில், கனெக்டிக்கட் முகத்துவாரம் பகுதியில் உறைந்த ஆற்றை பிக்கப் ட்ரக்கில் கடக்க முயன்ற தம்பதியினர், எதிர்பாராத விதமாக ஆற்றில் சிக்கிக் கொண்டனர்.

தகவல் அறிந்து உடனடியாக அங்கு சென்ற தீயணைப்பு துறையினர், கிரேன் உதவியுடன் தம்பதியினரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்