’எப்படி இருந்த நான்..!’ 34 கிலோ ரோமத்திலிருந்து விடுதலையான குஷியில் செம்மறி ஆடு
- Get link
- X
- Other Apps
5 வருடங்களாக பாரமாக இருந்த 34 கிலோ ரோமத்திலிருந்து செம்மறி ஆட்டிற்கு விடுதலை கொடுத்துள்ளனர் ஆஸ்திரேலிய தொண்டு நிறுவன தன்னார்வல்கர்கள்.
ஆஸ்திரேலியாவில் பாரக் என்று பெயரிடப்பட்ட செம்மறி ஆடு ஒன்று 5 வருடங்களாக முடிவெட்டப்படாத நிலையில் காட்டுக்குள்ளேயே சுற்றித் திரிந்திருக்கிறது. நீளமாக வளர்ந்த ரோமமானது பாரக்கிற்கு பாரத்தை கொடுத்தது மட்டுமல்லாமல் அதனால் பார்க்கமுடியாத அளவிற்கு கண்களையும் மூடி மறைத்துவிட்டது.
காட்டுக்குள் சுற்றித் திரிந்த பாரக்கை லான்ஸிஃபில்டில் உள்ள எத்கார்ஸ் மிஷன் என்ற வனவிலங்கு மீட்பு அறக்கட்டளை மீட்டுச்சென்றது. 34 கிலோ எடையுள்ள அடர்த்தியான ரோமத்தை அகற்றியபிறகு அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய பாரக்கின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர். கிட்டத்தட்ட 5 வருடங்களாக முடி கத்தரிக்கப்படவில்லை என்று கூறும் தன்னார்வலர்கள், சில நிமிடங்களில் முடியை அகற்றி பாரக்கிற்கு மீண்டும் பார்வை கொடுத்துவிட்டதாக கூறி மகிழ்ச்சியடைகின்றனர்.
இதுகுறித்து எத்கார்ஸ் மிஷன், ‘’பாரமான முடியால் இறக்கும் நிலையில் இருந்த பாரக்கிற்கு மீண்டும் வாழ ஓர் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது’’ என்று ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளது.
ALSO READ : கண்ணில் விரலை விட்டு ஒரே குத்து... சிறுவன் நடத்திய கவுன்டர் அட்டாக்கால் தப்பி ஓடிய சிறுத்தைபுலி!
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment