நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

காரில் இருந்து எச்சில் துப்பினால், குப்பை போட்டால் அபராதம்... எவ்ளோனு தெரிஞ்சா இனி இந்த தப்ப செய்ய மாட்டீங்க!

ஓடும் வாகனங்களில் இருந்து எச்சில் துப்புபவர்கள், குப்பை போடுபவர்களுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
உத்தர பிரதேச மாநிலத்தின் பெரிய நகரங்களில் கார்கள் உள்ளிட்ட ஓடும் வாகனங்களில் இருந்து எச்சில் துப்புபவர்கள் மற்றும் குப்பை போடுபவர்களுக்கு வெகு விரைவில் 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தற்போது அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த திட்டத்தை விரைவில் அமலுக்கு கொண்டு வருவதற்கு உத்தர பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
எனவே வெகு விரைவில் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஓடும் வாகனங்களில் இருந்து எச்சில் துப்புவது மற்றும் குப்பை போடுவது போன்ற காரியங்களை செய்வதை பலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். இதனால் சுற்றுப்புற தூய்மை பாதிக்கப்படுகிறது.
எனவே தூய்மையை பேணி காக்கும் விதமாகதான், ஓடும் வாகனங்களில் இருந்து எச்சில் துப்புபவர்கள் மற்றும் குப்பை போடுபவர்களுக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கும் திட்டத்தை உத்தர பிரதேச அரசு முன்னெடுத்துள்ளது. இதன் மூலம் வருங்காலங்களில் இந்த தவறை மக்கள் செய்ய மாட்டார்கள் என உத்தர பிரதேச அரசு நம்புகிறது.
இதுதவிர பெட்ரோல், டீசல் வாகனங்களால் ஒவ்வொரு ஆண்டும் காற்றின் தரம் மோசமடைந்து கொண்டே வருவதால், உத்தர பிரதேச மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை மற்றும் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் அதிகாரிகளுக்கு, முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் உத்தர பிரதேச மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி ஆலையை அமைக்கும் நிறுவனங்களுக்கு அனைத்து வகையான உதவிகளையும் மாநில அரசு செய்து கொடுக்கும் எனவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதி தெரிவித்துள்ளார். மேலும் உத்தர பிரதேச மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கும் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்படி எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சாலை வரி மற்றும் பதிவு கட்டணத்தில் இருந்து விலக்கு வழங்குவது தொடர்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார். இந்த திட்டம் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதற்கு மக்களை ஊக்குவிப்பதாக இருக்கும். அத்துடன் மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்து விழிப்புணர்வும் ஏற்படும்.
எலெக்ட்ரிக் வாகன துறை தற்போதுதான் மெல்ல மெல்ல வளர்ந்து கொண்டிருப்பதால், பெரிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில், அரசின் கொள்கைகளை எளிமையாக்குவது மிகவும் அவசியமானது எனவும் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இந்தியா உள்பட கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளின் கவனமும் தற்போது எலெக்ட்ரிக் மற்றும் மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் மீது திரும்பியுள்ளது.
பெட்ரோல், டீசல் வாகனங்களை போல், எலெக்ட்ரிக் வாகனங்கள் சுற்றுச்சூழலை பாதிக்காது என்பது அவற்றின் முக்கியமான சிறப்பம்சமாக உள்ளது. அத்துடன் இந்தியா போன்ற நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக இருப்பதால், மக்களும் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதற்கு அதிக ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர்.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!