நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கொரோனா வைரசின் பிறப்பிடம் பற்றி அமெரிக்காவில் ஆய்வு செய்க: சீனா பதிலடி.

அமெரிக்காவில் கொரோனா வைரசின் பிறப்பிடம் பற்றி உலக சுகாதார அமைப்பு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என சீனா வலியுறுத்தி உள்ளது.
பீஜிங்,

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கொரோனா வைரசின் பாதிப்புகள் முதன்முறையாக கண்டறியப்பட்டு வெளியுலகுக்கு தெரிய வந்தன.  உகானில் உள்ள விலங்கு உணவு விற்பனை மையமொன்றில் இருந்து உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசானது பரவியது என குற்றச்சாட்டு எழுந்தது.

சீனாவே கொரோனாவுக்கான உற்பத்தி மையம் ஆக இருந்துள்ளது என அமெரிக்கா குற்றச்சாட்டு தெரிவித்தது.  அமெரிக்கா அதிக அளவிலான கொரோனா பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளை கொண்டுள்ளன.

சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு செயல்படுகிறது என்றும் அமெரிக்கா குற்றச்சாட்டு கூறியது.  அந்த அமைப்புக்கு வழங்கி வந்த நிதியுதவி நிறுத்தப்படும் என்றும் கூறி மிரட்டல் விடுத்தது.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு நிபுணர்கள் சீனா நாட்டுக்கு சென்று சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.  இதன்பின், சீனாவில் எந்தவொரு விலங்கினத்தில் இருந்தும் கொரோனா வைரசானது பரவியதற்கான சான்று எதுவும் இல்லை என நிபுணர் குழு தெரிவித்தது.

உலக சுகாதார அமைப்புக்கான திட்ட தலைவர் பீட்டர் பென் எம்பேரக், சீனாவின் உகானில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்பொழுது, ஆய்வகத்தில் இருந்து மனித இனத்திற்கு வைரசானது அறிமுகப்படுத்தப்பட்டது என்பது சாத்தியமில்லை.

நாங்கள் உகானின் வைராலஜி அறிவியல் மையத்தில் ஆய்வு மேற்கொண்டோம்.  ஆய்வகத்தில் இருந்து வைரசானது தப்பி வெளியே செல்வதற்கான சாத்தியம் இல்லை.  ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவும் சம்பவங்களும் மிக அரிது என்பது எங்களுக்கு தெரியும் என கூறியுள்ளார்.

எனினும், உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய புலனாய்வில் சீன அரசின் தலையீட்டிற்கான சாத்தியம் உள்ளது என குற்றச்சாட்டு எழுப்பிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜேக் சுல்லிவன், நிபுணர்களின் ஆய்வு முடிவுகளை சாடினார்.

இந்நிலையில், அமெரிக்காவுக்கு பதிலடி தரும் வகையில், கொரோனா வைரசின் பிறப்பிடம் அமெரிக்காவில் இருந்து தோன்றியதற்கான சான்றுகளை பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என உலக சுகாதார அமைப்பிடம் சீனா வலியுறுத்தியுள்ளது.

இதுபற்றி சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி வாங் வென்பின் கூறும்பொழுது, சீனாவை எடுத்துக்காட்டாக கொண்டு, கொரோனா வைரசின் பிறப்பிடம் பற்றி கண்டறியும் விவகாரத்தில் அமெரிக்காவும் நல்ல விதத்தில், அறிவியல் அடிப்படையில் மற்றும் ஒத்துழைக்கும் வகையில் நடந்து கொள்ளும் என நாங்கள் நம்புகிறோம்.

கொரோனா வைரசின் பிறப்பிடம் பற்றி ஆய்வு மேற்கொள்ள உலக சுகாதார அமைப்பின் நிபுணர்களை அமெரிக்கா வரவேற்கும் என கூறியுள்ளார்.

இதேபோன்று, சீனாவின் நோய் கட்டுப்பாட்டு மையத்தின் தலைமை தொற்றியலாளர் ஜெங் குவாங் கூறும்பொழுது, கொரோனாவின் பிறப்பிடம் பற்றி கண்டறியும் சர்வதேச முயற்சிகளின் கவனம் தற்பொழுது அமெரிக்காவின் மீது உள்ளது என கூறியுள்ளார்.  இதனால், சீனா மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வந்த அமெரிக்காவுக்கு அந்நாடு பதிலடி கொடுத்துள்ளது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்