நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

விலைய விடுங்க! ருசி எப்படி? உலகின் விலை உயர்ந்த பிரியாணி இது தான்…

நீங்க பசிக்கு சாப்பிட்டாலும் சரி, ருசிக்கு சாப்பிட்டாலும் சரி, பிரியாணி பிரியர்கள் ஒரு கை பார்க்க வேண்டிய இடம் தான் இது.
மிகவும் ருசியான பிரியாணி எங்கே கிடைக்கும் என்று தேடி தேடி உண்பது இங்கு பலருக்கும் “ஜாலி ஹாபி” தான்… நம்முடைய “Foodie” நண்பர்கள் தங்களின் பிரியாணி அனுபவத்தை சொல்லும் போதே, அடுத்த முறை அந்த ஹோட்டலில் தான் பிரியாணி என்று நாம் ஒரு மன கணக்கு வைத்துக் கொள்வோம். பிரியாணியை பிடிக்காதவர்கள் என்று யாரும் உண்டா என்ன?

ருசியான பிரியாணி பற்றி மட்டுமே நாம் பேசியிருப்போம். ஆனால் உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த பிரியாணி எது என்று உங்களுக்கு தெரியுமா?

அமீரகத்தில் உள்ள பாம்பேய் பாரோ (bombay borough ) உணவகத்தில் தான் அந்த விலை உயர்ந்த பிரியாணி பரிமாரப்படுகிறது. தி ராயல் கோல்ட் பிரியாணி (The Royal Gold Biryani) என்று கூறப்படும் அந்த பிரியாணியில் ”23 கேரட்” உட்கொள்ளக் கூடிய தங்கம் வைக்கப்பட்டுள்ளது தான் அதில் ஸ்பெஷல். விலை என்னவாக இருக்கும் என்று கணிக்கிறீர்கள்? 1000 திராம்கள். இந்திய விலையில் இது வெறும் ரூ. 19,705 மட்டும் தானாம்!

தங்கம் மட்டும் தான் அதில் இருக்கிறதா என்றால் அது தான் இல்லை. இதில் தங்க இலை காபாப்கள், குங்குமப்பூ போட்டு சமைக்கப்பட்ட சாதம், காஷ்மீரின் செம்மறி ஆட்டுக்கறி கபாப், டெல்லியின் புகழ் பெற்ற செம்மறி ஆட்டு சாப்ஸ், ராஜ்புத்தின் சிக்கன் கபாப், முகலாயர்கள் ஸ்டைல் கோஃப்தா, மற்றும் மலாய் சிக்கன் ரோஸ்ட் போன்றவை இந்த இந்த ராயல் கோல்ட் பிரியாணி தட்டில் இடம் பெற்றிருக்கிறது. நீங்க பசிக்கு சாப்பிட்டாலும் சரி, ருசிக்கு சாப்பிட்டாலும் சரி, பிரியாணி பிரியர்கள் ஒரு கை பார்க்க வேண்டிய இடம் தான் இது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்