நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கருணைக் கிழங்கு சாப்பிட்டா இந்த பிரச்சினைலாம் கூட தீருமா? நாக்கு அரிக்காம எப்படி சமைக்கலாம்...

கருணைக் கிழங்கு இந்திய பாரம்பரிய உணவுகளில் பயன்படுத்தக் கூடிய கிழங்கு வகைகளில் ஒன்று. இதில் என்னென்ன மாதிரியான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும், என்னென்ன பிரச்சினைகள் தீரும் என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
கருணைக் கிழங்கு நம்மில் நிறைய பேர் சாப்பிடாமல் ஒதுக்கும் ஒரு கிழங்கு வகையாக இருக்கிறது. அதோடு அதிலிருக்கும் காரல் தன்மையால் நாக்கில் ஏற்படும் நமைச்சல் ஆகியவற்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நிறைய பேருக்குப் பிடிக்காது. ஆனால் மூல நோய் போன்ற அதிக சிரமங்களை ஏற்படுத்தும் நிறைய பிரச்சினைகளுக்கு இந்த கருணைக் கிழங்கு மிகச் சிறந்த தீர்வாக அமையும் என்பது தெரிவதில்லை.

உடல் எடை குறைய

பொதுவாக உருளைக்கிழங்கு போன்ற மண்ணுக்கு அடியில் விளையும் கிழங்கு வகைகளில் இருக்கும் அதிக அளவிலாக ஸ்டார்ச் மற்றும் கார்போ ஹைட்ரேட்டினால் உடல் எடை அதிகரிக்கும் என்ற பயம் இருக்கிறது. ஆனால் கருணைக் கிழங்கைப் பொருத்தவரையில் உடலுக்கு ஆற்றலைக் கொடுக்கும். அதோடு உடலில் கொழுப்புக்களைச் சேர விடாமல் தடுத்து, உடல் எடையைக் குறைக்கவும் வழி வகை செய்கிறது.

ஜீரண சக்தியை அதிகரிக்க

கருணைக் கிழங்கு அதிகமாக உணவில் சேர்த்துக் கொண்டால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். அஜீரணக் கோளாறுகளை நீக்கும். ஜீரண மண்டலம் சிறப்பாகச் செயல்பட உதவும். மூலநோயை குணப்படுத்தவும் உதவுகிறது. பெருங்குடல் மற்றும் உடல் உறுப்புகளின் ஆரோக்கியத்துக்கு உறுதுணையாக இருக்கும் வல்லமை கருணைக் கிழங்கிற்கு உண்டு.

உடல் சூட்டை தணிக்க

கருணைக் கிழங்கிற்கு உடல் சூட்டைக் குறைத்துக் குளிர்ச்சியாக்கும் ஆற்றல் கொண்டது. உடலில் ஏற்படும் அதிகப்படியான வெப்பத்தால், உடல் சூட்டால் ஏற்படும் நோய்களைத் தீர்க்கும் ஆற்றல் கருணைக் கிழங்குக்கு உண்டு. குறிப்பாக, நாள்பட்ட உடல் சூடு, மூலத்தினால் ஏற்படும் சூடு, எரிச்சல், அதிக அளவிலான காய்ச்சல் போன்றவற்றிற்கு மிகச் சிறந்த தீர்வாக இருக்கும். பசியின்மையைப் போக்கவும் ரத்தத்தை சுத்தப்படுத்தவும் செய்கிறது.

மாதவிடாய் கால வலி

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் தொடை, இடுப்பு மற்றும் உடல் வலியைப் போக்கும் ஆற்றல் கொண்டது. அதனால் மாதவிடாய் தொடங்குவதற்கும் ஒரு வாரத்திற்கு முன்னதாக இருந்தே கருணைக் கிழங்கை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளத் தொடங்குங்கள். அப்படி செய்வதால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிறு மற்றும் உடல் வலியைத் தீர்க்க முடியும்.

அரிப்பு ஏற்படுவது ஏன்?

கருணைக் கிழங்கு நிறைய பேருக்கு பிடிக்காது. அதற்குக் காரணம் அதை சாப்பிட்டால் நாக்கில் அரிப்பு ஏற்படும் என்பதால் அதை சாப்பிடத் தவிர்க்கிறோம். கருணைக் கிழங்கில் சிறிது காரத் தன்மை இருக்கிறது தான். ஆனால் புதிதாக கிழங்கு வெட்டியவுடன் சமைக்கத் தேவையில்லை. கருணைக்கிழங்கு பல மாதங்கள் வரை கெட்டுப் போகாமல் தான் இருக்கும். அதனால் சிறிது காலம் வைத்திருந்துவிட்டு சமைத்தால் நாக்கில் அரிப்பும் நமைச்சலும் ஏற்படாது. அதேபோன்று புளிப்பு எப்போதும் காரல் தன்மைகளைச் சமன் செய்யக்கூடிய ஆற்றல் கொண்டதாக இருக்கும். அதனால் சிறிது புளி அல்லது எலுமிச்சை சாறு, தக்காளி ஆகியவற்றில் ஒன்றை சேர்த்து சமைக்கும் பொழுது, அதில் உள்ள காரல் தன்மை நீங்கி, நாக்கில் நமைச்சலோ அரிப்போ ஏற்படாமல் இருக்கும்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!