நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஹோப் விண்கலம் அனுப்பிய செவ்வாய் கிரகத்தின் படத்தை ஐக்கிய அமீரகம் வெளியிட்டது..!

ஹோப் விண்கலம் அனுப்பிய செவ்வாய் கிரகத்தின் படத்தை ஐக்கிய அமீரகம் வெளியிட்டது..!

ஐக்கிய அமீரக விண்கலம் எடுத்து அனுப்பிய செவ்வாய் கிரகத்தின் படத்தை அந்த நாடு முதல்முறையாக வெளியிட்டது.

விண்வெளி ஆய்வில் அரபு நாடுகளுக்கு பெருமை சேர்க்கும் வகையில் செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள ஹோப் விண்கலம், 25ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருந்து கடந்த புதன்கிழமை படம் ஒன்றை எடுத்து அனுப்பியிருந்தது.

செவ்வாய் கிரகத்தின் வடபுலமும் அந்த கிரகத்தின் மிகப் பெரிய எரிமலையான ஒலிம்பஸ் மான்ஸும் அதில் இடம் பெற்றுள்ளது. ஹோப் விண்கலம் 2 ஆண்டுகள் செவ்வாய் கிரகத்தை சுற்றி வந்து ஆய்வுகளை மேற்கொள்ளும்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்