நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

செவ்வாய் கிரகத்தை இன்று அடைய உள்ளது ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆய்வு விண்கலம்.

செவ்வாய் கிரகத்தை இன்று அடைய உள்ளது ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆய்வு விண்கலம்.

ஐக்கிய அரபு அமீரகம், செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய அனுப்பிய எமிரேட்ஸ் மார்ஸ் மிஷனின் "ஹோப்" ஆர்பிட்டர் இன்று செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் நுழையவுள்ளது.

சுற்றுப்பாதையில் சுற்றிவந்தபடி ஆய்வு செய்ய உள்ள இந்த ஆர்பிட்டர், செவ்வாயின் வளிமண்டலம் குறித்த தரவுகளை அனுப்புமென தகவல்கள் வெளியாகியுள்ளது.

செவ்வாய் கோளின் தினசரி மற்றும் பருவகால மாற்றங்களை தொடர்ந்து ஆராய்ந்து செவ்வாய் வளிமண்டலம் குறித்த முழுமையான தகவல்களை "ஹோப்" ஆர்பிட்டர் வழங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜூலையில் ஏவப்பட்ட இந்த திட்டத்திற்காக 200 மில்லியன் டாலர்களை ஐக்கிய அரபு அமீரகம் செலவிட்டுள்ளது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்