நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

அமெரிக்க நுகர்வோர் நிதி பாதுகாப்பு வாரிய தலைவராக இந்திய அமெரிக்கர் நியமனம்.

அமெரிக்காவின் நுகர்வோர் நிதி பாதுகாப்பு வாரிய தலைவராக இந்திய அமெரிக்கரான ரோகித் சோப்ரா நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் அதிக வாக்குகளை கைப்பற்றி வெற்றி பெற்று புதிய அதிபரானார்.  துணை அதிபராக இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் பதவியேற்று கொண்டார்.

பைடன் அரசில் இந்திய அமெரிக்கர்கள் பலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில், அமெரிக்காவின் நுகர்வோர் நிதி பாதுகாப்பு வாரிய தலைவராக இந்திய அமெரிக்கரான ரோகித் சோப்ரா நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

இதுபற்றி வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், 5 ஆண்டுகள் ரோகித் இந்த பதவியில் நீடித்திடுவார் என அறிவித்து உள்ளது.  இதற்கு முன் அந்த வாரியத்தின் உதவி இயக்குனராக ரோகித் இருந்து வந்துள்ளார்.

கடந்த 2018ம் ஆண்டில் இருந்து மத்திய வர்த்தக கமிசனராகவும் அவர் பணியாற்றி வந்துள்ளார்.  அமெரிக்க கல்வி துறையின் சிறப்பு ஆலோசகராகவும் ரோகித் பதவி வகித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்