நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

போலீஸ் உடை அணிந்ததும் தனி கெத்து... அஞ்சுக்கும் பத்துக்கும் அலைந்த போலி எஸ்.ஐ.க்கு சராமரி குத்து !

போலீஸ் உடை அணிந்ததும் தனி கெத்து... அஞ்சுக்கும் பத்துக்கும் அலைந்த போலி எஸ்.ஐ.க்கு சராமரி குத்து !

நாட்றம்பள்ளி அருகே போலீஸ் உடை அணிந்து சேட்டையில் ஈடுபட்ட போலி சப்- இன்ஸ்பெக்டருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகேயுள்ள பச்சூர் டோல்கேட் பகுதியில் நேற்றிரவு போலீஸ் எஸ்.ஐ. உடை அணிந்து ஒருவர் வலம் வந்துள்ளார். போலீஸ் சீருடை அணிந்திருந்தாலும், அந்த நபர் காலில் ஷூ அணியாதது சற்று சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முறையான போலீஸ் சீருடையும் அணியவில்லை. பச்சூர் டோல்கேட் அருகே போலி எஸ்.ஐ வந்த போது, அங்கு டீக் கடையில் இருந்தவர்கள் சீருடை சரியாக அணியாததை பார்த்தும், காலில் சாதாரண செருப்பு அணிந்திருப்பதையும் கண்டும் சந்தேகமடைந்தனர்.

'பின்னர், நீங்கள் யார்? எந்த போலீஸ் நிலையத்தில் வேலை செய்கிறீர்கள் ' என்று அவரிடத்தில் டீக் கடையில் இருந்தவர்கள் விசாரித்துள்ளனர். போலி சப் இன்ஸ்பெக்டர் பதில் சொல்லாமால் முன்னுக்கு பின் முரணமாக பேசியுள்ளார். இது குறித்து, அங்கிருந்தவர்கள் நட்றாம்பள்ளி போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.

உடனடியாக, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், அந்த நபரை பிடித்து முறையாக விசாரணை நடத்தினர். அப்போது, அந்த நபர் போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் இல்லை என்றும் குடியாத்தம் பகுதியை சேர்ந்த சாதாரண முருகதாஸ் என்பதும் தெரிய வந்தது. இதனால், ஆத்திரமடைந்த அங்கிருந்த பொதுமக்கள் போலீஸார் முன்னிலையிலேயே முருகதாசுக்கு தர்ம அடி கொடுத்தனர். பின்னர், முருகதாஸிடத்தில் போலீஸ் விசாரணை நடத்தினர். அப்போது, பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்தன.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கள்ள நோட்டு மாற்றும் கும்பல் ரூ. 5 லட்சம் பணத்துடன் தர்மபுரியை சேர்ந்த கள்ள நோட்டு கும்பலை சந்திக்க திட்டமிட்டுள்ளது. கள்ள நோட்டு கும்பலிடத்தில் 5 லட்சம் கொடுத்து விட்டு 10 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்றிக் கொள்வது திட்டம். பணத்தை மாற்றும் போது, போலி எஸ்.ஐ முருகதாஸ் கள்ள நோட்டு மாற்றும் இடத்துக்கு வந்து விட வேண்டும். போலீஸை பார்த்ததும் கள்ள நோட்டு கும்பலிடத்தில் இருந்து மொத்த பணத்தையும் கொள்ளைடிக்க வேண்டுமென்பது ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கள்ள நோட்டு கும்பலின் திட்டமாக இருந்துள்ளது.

இதற்காக, முருகதாஸிடத்தில் குவாட்டர், கோழி பிரியாணியுடன் சம்பளமாக ரூ. 1000 பேசியுள்ளனர். முருகதாசும் ஒப்புக் கொண்டு போலீஸ் சீருடை அணிந்து நடிக்க வந்துள்ளார். போலீஸ் உடை அணிந்ததும் தனி கெத்து வந்துள்ளது. இதனால், போலீஸ் உடையில் ஆங்காங்கே நடமாடி திரிந்துள்ளார். பொதுமக்களையும் மிரட்டியதாக தெரிகிறது. பின்னர், உண்மையான போலிசாரிடம் சிக்கி சின்னா பின்னமாகிப் போனார். முருகதாஸ் சிக்கியதை கண்ட கள்ள நோட்டு மாற்றும் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டது. தற்போது, முருகதாஸ் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்க, கள்ள நோட்டு கும்பலுக்கு போலீசார் வலை விரித்து காத்திருக்கின்றனர்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!