இளம்பெண்ணிடம் முத்தத்தை அபராதமாக வசூலித்த காவல் அதிகாரி சஸ்பெண்ட் - வைரல் வீடியோ
- Get link
- X
- Other Apps
தென்அமெரிக்க நாடான பெருவில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறபிக்கப்பட்டுள்ளது.
பெரு நாட்டில் கொரோனா விதிமுறையை மீறிய பெண்ணிடம் அபராதம் வசூலிக்காமல் அவரிடமிருந்து முத்தம் பெற்ற காவல்துறை அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கொரோனா பரவலை தடுக்க உலக நாடுகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பாதுகாப்பு விதியை மீறுபவர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தென்அமெரிக்க நாடான பெருவில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறபிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் இருக்கும் போது பெரு நாட்டின் தலைநகரான லிமாவில் இளம்பெண் ஒருவர் காரில் சென்றுள்ளார். இதையடுத்து அவரை பிடித்த போலீசார் கொரோனா விதிமீறியை மீறியதாக அவர் மீது அபராதம் விதிக்க முயன்றுள்ளார்.
இதை தொடர்ந்து அபராதம் விதிக்க வேண்டாமென்று காவலரிடம் கேட்டுக் கொண்டுள்ளார். இதனால் அந்த பெண்ணிடம் அபராதத்திற்கு பதிலாக காவல் அதிகாரி முத்தம் கேட்டு வாங்கி உள்ளார். காவல் அதிகாரியிடம் நெருக்கமாக பெண் முத்தம் கொடுப்பதை அருகே கட்டிடத்தில் இருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய காவல் அதிகாரி தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Also read : மலேரியாவுக்கு எதிராக போராடும் ‘சூப்’ வகைகள்
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment