நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

டெலிமார்க்கெட்டிங் மூலம் தொலைபேசி பயனாளர்களுக்கு தொல்லை கொடுத்தால் அபராதம் விதிக்கப்படும்: மத்திய அரசு எச்சரிக்கை.

டெலிமார்க்கெட்டிங் மூலம் தொலைபேசி பயனாளர்களுக்கு தொல்லை கொடுத்தால் அபராதம் விதிக்கப்படும்: மத்திய அரசு எச்சரிக்கை

டெலிமார்க்கெட்டிங் என்ற பெயரில் தொலைப்பேசி பயனாளர்களை தொந்தரவு செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், டெலிமார்க்கெட்டிங் மூலம் நிதி மோசடி நடைபெறுவதை தடுக்க டிஜிட்டல் புலனாய்வு பிரிவை தொடங்கவும் திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதன்படி, தேவையில்லாமல் பயனாளர்களை தொல்லை செய்பவர்களின் இணைப்பு முற்றிலும் துண்டிக்கப்படும் என்றும், தொலைதொடர்பு பயனாளர்களை தொல்லை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் மக்களுக்கு டிஜிட்டல் பணபரிவர்த்தனை மற்றும் தொழில்நுட்பத்தின் மீதான நம்பிக்கை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்