ஈரானில் அரங்கேறிய கொடூரம்: இறந்த பின்பும் தூக்கிலிடப்பட்ட பெண்.
- Get link
- X
- Other Apps
ஈரானில் மரணத் தண்டனை விதிக்கப்பட்ட பெண் ஒருவர் மாராடைப்பால் இறந்த பின்னரும் அவரை மீண்டும் தூக்கிலிடப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அரப் நியூஸ் வெளியிட்ட செய்தியில், “ சாரா இஸ்மாயில் என்ற பெண் தன்னையும், தனது குழந்தையும் துன்புறுத்தி வந்த கணவரை தற்காப்புக்காக கொலைச் செய்திருக்கிறார். இவ்வழக்கில் அவருக்கு மரணத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் அவருக்கு மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்து அவரது வழக்கறிஞர் தனது சமூக வலைதள பக்கத்தில் வேதனையான பதிவை பகிர்ந்திருக்கிறார். அதில் சாரா தூக்கில்போடுவதற்கு முன்பு அவரை மற்றவர்கள் தூக்கிலிடும் காட்சியை பார்க்க வைத்துள்ளனர்.இதில் ஏற்பட்ட அதிர்ச்சியில் வரிசையில் 16 வது நபராக நின்ற சாராவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணமடைந்திருக்கிறார். ஆனால் அதிகாரிகள் அவர் இறந்ததையும் பொருட்படுத்தாமல் அவரை மீண்டும் தூக்கு கயிற்றில் ஏற்றி சாரா அமர்ந்திருக்கும் நாற்காலியை அவரது மாமியார் காலால் எட்டி உதைத்து தூக்கிலிடப்பட்டிருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார். ” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானை பொறுத்தவரை அங்கு கொலை செய்தவரின் மரணம் அவரால் கொல்லப்பட்டவரின் நெருங்கிய உறவுகளுக்கு முன் நிகழ வேண்டும் அப்போதுதான் அக்குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. சாராவுக்கு நிகழ்ந்தது போன்று பல மனித உரிமை மீறல்கள் ஈரான் சிறையில் அரங்கேறி வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
2020 ஆம் ஆண்டில் மட்டும் ஈரானில் 200க்கும் மேற்பட்டவர்கள் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.
கண்ணில் விரலை விட்டு ஒரே குத்து... சிறுவன் நடத்திய கவுன்டர் அட்டாக்கால் தப்பி ஓடிய சிறுத்தைபுலி!
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment